நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புக்கிட் ஜாலில் தேசிய ஹாக்கி அரங்கில் கலைநிகழ்ச்சிகளுக்கு அனுமதிப்பா? பாஸ் எம்.பி கண்டனம்

கோலாலம்பூர்: 

புக்கிட் ஜாலில் தேசிய ஹாக்கி அரங்கில் கலைநிகழ்ச்சிகளுக்கு அரசாங்கம் அனுமதி அளித்துள்ளதைப் பாஸ் கட்சியைச் சேர்ந்த பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற உறுப்பினர் ஃபவ்வாஸ் ஜான் கண்டித்துள்ளார் 

ஹாக்கி அரங்கில் 26 கலைநிகழ்ச்சிகள் நடத்த அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது. அரசாங்கம் அனுமதி அளித்துள்ளதன் வாயிலாக ஹாக்கி அரங்கின் அடிப்படை நோக்கம் பயனற்று போயுள்ளதாக அவர் சாடினார் 

கலைநிகழ்ச்சிகள் அங்கே நடத்தப்பட்டால் கண்டிப்பாக ஹாக்கி அணிகள் பயிற்சிகள் பெறுவதற்கான வாய்ப்புகள் இல்லாமல் போகும் சூழல் ஏற்படும் என்று அவர் கருத்துரைத்தார் 

விளையாட்டு மைதானங்கள், அரங்குகள் யாவும் அந்தந்த நோக்கத்தைக் கொண்டு செயல்படுத்த வேண்டும் என்று அவர் இன்றைய மக்களவை கூட்டத்தில் தெரிவித்தார். 

முன்னதாக, அடுத்தாண்டு மலேசியாவில் 26 கலைநிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளதாகவும் அதற்காக ஹாக்கி அரங்கினை முன்கூட்டியே பதிவு செய்துள்ளனர் என்றும் இளைஞர், விளையாட்டு துறை அமைச்சர் ஹன்னா இயோ கூறினார்

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset