நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அரசியல் நெருக்கடிகளைத் தவிர்க்க மலேசியாவில் இரு கட்சி கொள்கை கொண்டுவரப்பட வேண்டும்: துன் டாக்டர் மகாதீர் தகவல் 

கோலாலம்பூர்: 

கடந்த 15ஆவது பொதுத் தேர்தலினால் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பாண்மை கிடைக்கவில்லை. பெரும்பாண்மை கிடைக்கவில்லை என்றால் நிலையான ஓர் அரசாங்கம் அல்லது ஆட்சி நடத்த முடியாது. இதன் காரணமாக மலேசியாவில் இரு கட்சி கொள்கை கொண்டு வரப்பட வேண்டும் என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் கூறினார். 

நடப்பு அரசாங்கமானது நிலையான அரசாங்கமாக இல்லை என்றும் கூட்டணி கட்சிகளின் ஆதரவில் தான் ஒற்றுமை அரசாங்கம் ஆட்சி புரிந்து வருவதாக அவர் சொன்னார். 

கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்து வந்த அம்னோ, தற்போது உடைந்து ஐந்து கட்சியாக உருவெடுத்துள்ளது. இதனால் எந்த கட்சிக்கும் வலுவாக மற்றும் உறுதியாக ஆதரவு இல்லை என்பது தெளிவாக தெரிவதாக அவர் சொன்னார். 

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கமாக இது இல்லை. மாறாக, மக்களுக்குப் பிடிக்காத அரசாங்கமாக இது உள்ளதாக மகாதீர் சாடினார். 

ஆக, அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளை உதாரணமாக கொண்டு மலேசியாவில் இரு கட்சி கொள்கையைக் கொண்டு வர வேண்டும். அமெரிக்காவில் பார்த்தோமேயானால் குடியரசு, ஜனநாயகம் ஆகிய இரு கட்சிகள் பலம் வாய்ந்த கட்சியாக உள்ளன என்று அவர் சொன்னார் 

15ஆவது பொதுத்தேர்தலில் நம்பிக்கை கூட்டணி 82 இடங்களையும் தேசிய முன்னணி 30 இடங்களையும் தேசிய கூட்டணி 73 இடங்களையும் வாரிசான் 3 இடங்களையும் ஜிபிஎஸ் 23 இடங்களையும் வென்றது. 

இதனால் கடந்த 2022ஆம் ஆண்டு ஒற்றுமை அரசாங்கம் அமைக்கப்பட்டு நாட்டின் 10ஆவது பிரதமராக டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் பதவியேற்றார்

-மவித்திரன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset