நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்படாது: சாவ் கோன் இயோ

ஜார்ஜ் டவுன்: 

அடுத்தாண்டு எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்க பினாங்கு மாநில அரசு திட்டமிடவில்லை என்று அம்மாநில முதல்வர் சாவ் கோன் இயோ தெரிவித்துள்ளார். 

2024-ஆம் ஆண்டில் ஒவ்வொரு எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினருக்கும் மாநில அரசு ஆண்டுக்கு 60,000 வெள்ளி ஒதுக்கீடு செய்துள்ளது. 

அதே தொகை அடுத்தாண்டும் வழங்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார். 

எதிர்க்கட்சியின் கீழுள்ள ஒவ்வொரு தொகுதிக்கும் மாநில அரசு அதன் ஒருங்கிணைப்பு அதிகாரியை நியமித்துள்ளதால், எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கான ஒதுக்கீட்டை அதிகரிக்க அரசு திட்டமிடவில்லை.

முன்னதாக ஒவ்வொரு எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினருக்கும் மொத்தம் 500,000 வெள்ளி நிதி ஒதுக்கப்பட்டதாகவும், கடந்த ஆண்டு ஒவ்வொரு ஒருங்கிணைப்பு அதிகாரிக்கும் 100,000 வெள்ளி ஒதுக்கப்பட்டதாகவும் சாவ் கூறினார்.

2008-ஆம் ஆண்டு பக்காத்தான் ஹராப்பான் அரசு நிர்வாகத்தைக் கைப்பற்றியப் போது, ​​எதிர்க்கட்சிகளுக்குக் கொஞ்சம் நிதி ஒதுக்க முடிவு செய்ததாகவும் அவர் கூறினார்.

எதிர்க்கட்சிக்கு சமமான ஒதுக்கீட்டை நாங்கள் வழங்கினால், எங்கள் ஆதரவாளர்கள் எங்களைக் கேள்வி கேட்பார்கள். எனவே அது வேறுபட்டதாக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset