நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜனவரி முதல் சிறப்பு இலக்கவியல் அனுமதி அட்டையை குடிநுழைவு துறை அறிமுகம் செய்யவுள்ளது: சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில்

புத்ராஜெயா: 

குடிநுழைவுத் துறை அடுத்த ஆண்டு ஜனவரி முதல் சிறப்பு இலக்கவியல் அனுமதி அட்டையை அறிமுகப்படுத்தும் என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.

1963-ஆம் ஆண்டு குடிவரவு ஒழுங்குமுறையின் 14-ஆவது விதியின் அடிப்படையில் மலேசியாவில் முப்பது நாட்களுக்கு மேல் நுழைவதற்கும் தங்குவதற்கும் உரிமையை வைத்திருப்பவருக்கு வழங்குவதற்காக வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் ஒரு ஆவணம் இதுவாகும். 

தற்போது விண்ணப்பம் மற்றும் சிறப்பு அனுமதி அட்டைகளை நேரில் சென்று பெற வேண்டிய நிலை உள்ளது. 

குடிவரவுத் துறையின் விசா, பாஸ் மற்றும் பெர்மிட் பிரிவில் உள்ள சமூக மற்றும் நிபுணத்துவ விசிட் பாஸ் கவுன்டரில் சராசரியாக 50 சதவீத பரிவர்த்தனைகள் சிறப்பு பாஸ் விண்ணப்பங்கள் தொடர்பானவை என்பதால் நெரிசல் ஏற்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டில், மொத்தம் 139,344 சிறப்பு அனுமதி அட்டைகள் வழங்கப்பட்டன,

இந்த ஆண்டு அக்டோபர் வரை மொத்தம் 119,019 சிறப்பு பாஸ்கள் வெளிநாட்டினருக்கு வழங்கப்பட்டுள்ளன.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset