நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நஜிப் மீதான நம்பிக்கை மீறல் வழக்கை அரசுத் தரப்பு தொடர்ந்தது

கோலாலம்பூர்:

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக், கருவூலத்தின் முன்னாள் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ முகமட் இர்வான் செரிகார் அப்துல்லா ஆகியோர் மீது நம்பிக்கை மீறல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட 6 குற்றச்சாட்டுகளுக்கு எதிராக அரசுத் தரப்பு வழக்கு தொடர்ந்தது.

சர்வதேச பெட்ரோலிய முதலீட்டு நிறுவனத்திற்கு செலுத்திய தொகையுடன் தொடர்புடைய மலேசிய அரசாங்கத்தின் சொத்தான 6.6 பில்லியன் ரிங்கிட் தொடர்பான வழக்கு இதுவாகும்.

இன்று உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையில்,

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 254ஆவது பிரிவை தனது தரப்பு இந்த வழக்கில் பயன்படுத்தவில்லை என்று துணை அரசு வழக்கறிஞர் முஹம்மது சைபுதீன் ஹாஷிம் முஸைமி தெரிவித்தார்.

எந்த நிலையிலும் வழக்கைத் தொடர மறுக்கக்கூடிய அரசு வழக்கறிஞரைப் பற்றி இந்த பிரிவு கையாள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset