நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உள்துறை அமைச்சகம் மதித்து ஏற்கின்றது: சைஃபுடின் நசுத்தியோன்

கோலாலம்பூர்: 

பறிமுதல் செய்யப்பட்ட 64,000 வெள்ளி மதிப்பிலான 172 ஸ்வாட்ச் கைக்கடிகாரங்களை மீண்டும் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ள கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உள்துறை அமைச்சகம் மதித்து ஏற்பதாக அதன் அமைச்சர் டத்தோஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார். 

உயர் நீதிமன்றத்தின் முடிவை மேல்முறையீடு செய்யப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். 

இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பே இறுதியானது என்று அதன் முடிவை உள்துறை அமைச்சகம் மதிப்பதாகவும் சைஃபுடின் விளக்கமளித்துள்ளார். 

மேல்முறையீடு செய்தால் அஃது உயர் நீதிமன்றத்தின் முடிவை அவமதிப்பதாகக் கருதப்படும் என்றும் சைஃபுடின் குறிப்பிட்டார். 

முன்னதாக, கடந்தாண்டு உள்துறை அமைச்சகம் பறிமுதல் செய்த 172 ஸ்வாட்ச் கைக்கடிகாரங்களை மீண்டும் ஒப்படைக்க கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்று முதல் 14 நாட்களுக்குள் அனைத்துக் கைக்கடிகாரங்களையும் திருப்பித் தருமாறு உள்துறை அமைச்சகத்திற்கு நீதிபதி டத்தோ அமர்ஜித் சிங் உத்தரவிட்டார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset