நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நான்கு நாடுகளுக்கான பயணத்திற்கு  தனியார் நிறுவனங்களின் நிதி பயன்படுத்தப்படவில்லை: பிரதமர்

கோலாலம்பூர்:

நான்கு நாடுகளுக்கான பயணத்திற்கு எந்தவொரு தனியார் நிறுவனங்களின் நிதியும் பயன்படுத்தப்படவில்லை.

பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை உறுதியாக கூறினார்.

பிரதமர் என்ற முறையில் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டு நான்கு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டேன்.

இப்பயணத்திற்கான அரசாங்கத்தின் நிதியில் இருந்து 1.6 மில்லியன் ரிங்கிட் செலவிடப்பட்டது.

ஆகையால் இப்பயணத்திற்கான நான் தனியார் நிறுவனங்களின் நிதியை பயன்படுத்தவில்லை.

இந்த நான்கு நாடுகளுக்கான பயணத்திற்கு அரசாங்கம் மலேசிய ஏர்லைன்ஸ் விமானத்தை பயன்படுத்தியது.

இதற்கான மொத்த செலவு 1.6 மில்லியன் ரிங்கிட்டாகும். இது முற்றிலும் அரசாங்கத்தின் பணமாகும்.

மேலும் விமானத்தில் மீதமுள்ள இடங்கள் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்படுகின்றன.

அவை உண்மையில் முதலீடு அல்லது கூட்டு முயற்சிகளுக்காக சம்பந்தப்பட்ட நாடுகளுக்குச் செல்பவர்களுக்கு வழங்கப்படுகிறது என பிரதமர் தனது முகநூல் பதிவில் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset