நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியா - தென் கொரியாவுக்கு இடையிலான உறவு மேலும் வலுப்பெறும்; பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு உருவாகும்: பிரதமர்

சியோல்:

மலேசியா - தென் கொரியாவுக்கு இடையிலான உறவு மேலும் வலுப்பெறும்.

அதே வேளையில் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு உருவாகும் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டு தென் கொரியா சென்றுள்ள பிரதமர், 

தென் கொரிய அதிபர் யூன் சுக் யோலை யோங்சானில் உள்ள அதிபர் அலுவலகத்தில் சந்தித்தார்.

சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பில் வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முஹம்மத் ஹாசன்,  முதலீடு, வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ தெங்கு ஜப்ருல் தெங்கு அஜீஸ், அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்க அமைச்சர் சாங் லிஹ் காங், தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் டத்தோ ஆரோன் அகோ டகாங் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்திற்கு பின் பேசிய பிரதமர், தென் கொரியாவைச் சேர்ந்த நிறுவனங்களின் செயல்பாடுகள் மலேசியாவில் வெளிநாட்டு நிறுவங்கள் போல் இல்லை.

நான் பினாங்கைச் சேர்ந்தவன். பினாங்கு பாலம் தென் கொரிய நிறுவனத்தால் கட்டப்பட்டது.

மேலும், பெட்ரோனாஸ் இரட்டகோபுரம்,  மெனாரா மெர்டேகா 118 ஆகியவை தென் கொரியாவைச் சேர்ந்த நிறுவனங்களை உள்ளடக்கியது.

இந்த குடியரசின் கட்டுமான நிறுவனங்களை மலேசியாவிற்கு மிக அருகில் உருவாக்குகிறது.

ஆக இரு நாடுகளின் கூட்டமைப்பு மேலும் அதிகரிக்கும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset