செய்திகள் மலேசியா
60 வயதுக்கு மேல் நோய்களால் வாடும் தொழிலாளர் வர்க்கத்தை மனிதவள அமைச்சு எவ்வாறு பாதுகாக்கிறது: டத்தோஶ்ரீ சரவணன் கேள்வி
கோலாலம்பூர்:
அறுவது வயதுக்கு மேல் நோய்களால் வாடும் தொழிலாளர் வர்க்கத்தை பாதுகாக்க மனிதவள அமைச்சு என்ன திட்டங்களை கொண்டுள்ளது.
தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஶ்ரீ எம். சரவணன் மக்களவையில் இக்கேள்வியை எழுப்பினார்.
தொழிலாளர்களை பாதுகாக்கும் மிகப் பெரிய கடப்பட்டை சொக்சோ கொண்டுள்ளது.
இதை அடிப்படையில் சொக்சோவில் முறையாக சந்தா செலுத்தப்படுகிறது.
இந்த சொக்சோவில் 60 வயதுக்கு கீழ்ப்பட்ட தொழிலாளர்கள் தான் இழப்பீடுகளை பெற முடியும்.
ஆனால் பல தொழிலாளர்கள் 60 வயதுக்கு மேல் தான் பல அபாயக் கரமான நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.
அதனால் இழப்பீட்டுக்கான 60 வயது என்ற நிபந்தனையை 65ஆக உயர்த்தப்பட வேண்டும்.
இது தொடர்பில் மனிதவள அமைச்சின் நிலைபாடு என்னவென்று டத்தோஶ்ரீ சரவணன் கேள்வி எழுப்பினார்.
இக்கேள்விக்கு பதிலளித்த மனிதவள துணையமைச்சர் டத்தோஶ்ரீ அப்துல் ரஹ்மான்,
குறைந்தபட்ச ஓய்வூதிய வயதுச் சட்டம் 2012 இன் படி, கடந்த 2013 ஆம் ஆண்டு இழப்பீட்டுக்கான வயது வரம்பை 55 வயதிலிருந்து 60 வயதாக சொக்சோ மாற்றியது.
இதன் அடிப்படையில் இந்த வயது வரம்பு 60ஆக உள்ளது.
இருப்பினும் 60 வயது, அதற்கு மேற்பட்டவர்கள் இன்னும் முறையான துறையில் பணிபுரியும் தொழிலாளர்கள், அந்த தொழிலாளர்கள் வேலை விபத்து திட்டம் சட்டம் 4 இன் கீழ் பாதுகாக்கப்படுவதற்கு தகுதியுடையவர்கள்.
பரிந்துரைக்கப்பட்ட பங்களிப்பு விகிதம் இரண்டாவது அட்டவணையின்படி உள்ளது. இது முதலாளியால் மட்டுமே செலுத்தப்படுகிறது.
அதே வேளையில் சுய தொழில் செய்பவர்கள் சுயதொழில் சமூக பாதுகாப்பு 2017 (சட்டம் 789) கீழ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
சுயதொழில் செய்பவர்களுக்கான பாதுகாப்பு திட்டத்தின் தொழில் சார்ந்த நோய்கள் உட்பட தொழில் சார்ந்த பேரழிப்புகள் உட்பட வேலை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது விபத்துக்கள் ஆகியவற்றுக்கு உரிய பாதுகாப்புகள் வழங்கப்பட்டும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 25, 2024, 3:18 pm
எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்படாது: சாவ் கோன் இயோ
November 25, 2024, 1:05 pm
கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உள்துறை அமைச்சகம் மதித்து ஏற்கின்றது: சைஃபுடின் நசுத்தியோன்
November 25, 2024, 1:04 pm
நான்கு நாடுகளுக்கான பயணத்திற்கு தனியார் நிறுவனங்களின் நிதி பயன்படுத்தப்படவில்லை: பிரதமர்
November 25, 2024, 1:02 pm
போதுமான விளம்பரங்கள் இல்லாததே மலேசியாவுக்கான சுற்றுப் பயணிகள் குறைவிற்கு முக்கிய காரணம்: மஸ்லி மாலிக்
November 25, 2024, 1:01 pm
பினாங்கில் நடந்த கைகலப்பு சம்பவம் தொடர்பாக 17 பேர் கைது: போலிஸ்
November 25, 2024, 12:40 pm
எஸ்பிஎம் தேர்வு டிசம்பர் 2-ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 6-ஆம் தேதி வரை நடைபெறும்: கல்வி அமைச்சகம் தகவல்
November 25, 2024, 11:57 am