செய்திகள் மலேசியா
எஸ்பிஎம் தேர்வு டிசம்பர் 2-ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 6-ஆம் தேதி வரை நடைபெறும்: கல்வி அமைச்சகம் தகவல்
கோலாலம்பூர்:
இவ்வாண்டுக்கான எஸ்பிஎம் தேர்வு டிசம்பர் 2-ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 6-ஆம் தேதி வரை நடைபெறும் என்று கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.
இம்முறை மொத்தம் 402,956 பேர் எஸ்பிஎம் தேர்வினை நாடு முழுவதும் 3,337 தேர்வு மையங்களில் எழுதவுள்ளனர் என்று கல்வி அமைச்சகம் ஓர் அறிக்கையில் வெளியிட்டுள்ளது.
மலாய் மொழி பாடத்திற்கான வாய்மொழி சோதனை டிசம்பர் 2-ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 5-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் டிசம்பர் 9, 10, 12-ஆம் தேதிகளில் செய்முறை அறிவியல் தேர்வுகள் நடைபெறவுள்ளன.
இதனை தொடர்ந்து, ஆங்கில மொழி பாடத்திற்கான வாய்மொழி சோதனை டிசம்பர் 16, 17, 18, 19 ஆகிய தேதிகளில் நடைபெறும்.
அதுமட்டுமல்லாமல், மலாய், ஆங்கில மொழிகளுக்கான கேட்கும் தேர்வு டிசம்பர் 31-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
எஸ்பிஎம் தேர்வு எழுதுவோர் தேர்வுக்கான தேதி, நேரம், குறியீடு மற்றும் தேர்வுத் தாள் பற்றிய தகவல்களைப் பெற தேர்வு கால அட்டவணையைப் பார்க்குமாறு கல்வியமைச்சகம் நினைவூட்டியது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
November 25, 2024, 3:18 pm
எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்படாது: சாவ் கோன் இயோ
November 25, 2024, 1:05 pm
கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உள்துறை அமைச்சகம் மதித்து ஏற்கின்றது: சைஃபுடின் நசுத்தியோன்
November 25, 2024, 1:04 pm
நான்கு நாடுகளுக்கான பயணத்திற்கு தனியார் நிறுவனங்களின் நிதி பயன்படுத்தப்படவில்லை: பிரதமர்
November 25, 2024, 1:02 pm
போதுமான விளம்பரங்கள் இல்லாததே மலேசியாவுக்கான சுற்றுப் பயணிகள் குறைவிற்கு முக்கிய காரணம்: மஸ்லி மாலிக்
November 25, 2024, 1:01 pm
பினாங்கில் நடந்த கைகலப்பு சம்பவம் தொடர்பாக 17 பேர் கைது: போலிஸ்
November 25, 2024, 11:57 am