நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிரதமரின் அதிகாரப்பூர்வ பயண செலவில் அரசாங்கம் கிட்டத்தட்ட 1 மில்லியன் ரிங்கிட்டை மிச்சப்படுத்தியுள்ளது: ஃபஹ்மி

புத்ராஜெயா:

பிரதமரின் அதிகாரப்பூர்வ பயண செலவில் அரசாங்கம் கிட்டத்தட்ட 1 மில்லியன் ரிங்கிட்டை மிச்சப்படுத்தியுள்ளது.

அரசாங்க பேச்சாளரும் தகவல் தொடர்பு அமைச்சருமான ஃபஹ்மி ஃபட்சில் இதனை கூறினார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், தனது குழுவுடன் ஐந்து நாடுகளுக்கு அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொண்டார்.

இந்த பயணம் செய்வதற்கான செலவில் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் ரிங்கிட்டை அரசாங்கம் சேமிக்க முடிந்தது.

தற்போது அதிகாரப்பூர்வ விமானத்தைப் பயன்படுத்தினால் செலவாகும் 2.5 மில்லியன் ரிங்கிட்டை  ஒப்பிடும்போது ​​1.662 மில்லியன் ரிங்கிட்டை மட்டுமே அரசாங்கம் ஏற்கும்.

உத்தியோகபூர்வ தூதுக்குழுவுடன் பிரதமரின் விமானச் செலவை அரசாங்கம் முழுமையாகச் செலுத்தியது.

இதற்காக எந்த நிறுவனத்தாலும் நிதியளிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset