நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நிபந்தனைகள் நியாயமானதாக இருந்தால் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒதுக்கீடுகள் குறித்து விவாதிக்க தயார்: ஹம்சா

கோலாலம்பூர்: 

நிபந்தனைகள் நியாயமானதாக இருந்தால், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒதுக்கீடுகள் குறித்து விவாதிக்க தேசியக் கூட்டணி தயாராகவுள்ளது என்று டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின் கூறினார். 

இந்த விவகாரம் தொடர்பாக சமீபத்தில் பாஸ் கட்சியின் செயலாளர் டத்தோஸ்ரீ தக்கியுடின் ஹாசன், துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஃபடில்லா யூசோப் ஆகியோரை சந்தித்ததாக எதிர்க்கட்சித் தலைவருமான  ஹம்சா ஜைனுடின் தெரிவித்தார். 

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒதுக்கீடுகள் வரைவு அரசாங்கத் தரப்புக்கு மட்டுமே சாதகமாக உள்ளதாகத் தெரிவித்தார். 

அதனால் தான் அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்க முடியாது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் நியாயமானதாகவும், மக்களின் நலனை கருத்தில் கொண்டும், நாட்டின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும் இருந்தால் நாங்கள் அதை வெறுமனே எதிர்க்க மாட்டோம் என்றார் அவர். 

அரசாங்கம் மக்கள் நலனில் சரியான அக்கறை காட்டவில்லை என்றால் நான் எதிர்கட்சியில் இருப்பேன். சரியாக செய்யாதவற்றுக்கு எதிராக தொடர்ந்து பேசுவேன் என்றார் ஹம்சா. 

கூட்டணிக்கும் அதன் அங்கத்தவர்களுக்கும் இந்த விதிமுறைகள் நியாயமற்றவை என்பதால் இதற்கு முன் இரண்டு வரைவு முன்மொழிவுகளை பெரிகாடன் ஒருமனதாக நிராகரித்ததாக ஹம்சா கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset