நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பத்துமலை இந்திய கலாச்சார மையம்; ஜனவரி 19ல் அதிகாரப்பூர்வமாக திறக்கப்படும்: டான்ஶ்ரீ நடராஜா

பத்துமலை:

பத்துமலை இந்திய கலாச்சார மையம் வரும் ஜனவரி 19ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக திறக்கப்படும்.

ஶ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஶ்ரீ ஆர். நடராஜா இதனை கூறினார்.

2025ஆம் ஆண்டுக்கான தைப்பூச விழாவை மிகவும் பிரமாண்டமாகவும் சிறப்பாகவும் கொண்டாடுவதற்கான அனைத்து பணிகளும் தற்போது சுமூகமாக நடைபெற்று வருகிறது.

பத்துமலையில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்பதால் கால்வாய்கள் பெரியதாக்கப்பட்டு வருகிறது.

அதே வேளையில் நிரந்தர மின் விளக்குகள் மாற்றப்பட்டு வருகிறது. சாலைகள் பெரிதாக்கப்பட்டு வருகிறது.

இப்படி பக்தர்களின் வசதிக்காகவும் பாதுகாப்புக்காகவும் பல நடவடிக்கைகளை தேவஸ்தானம் துரிதமாக மேற்கொண்டு வருகிறது.

மேலும் பத்துமலை இந்திய கலாச்சார மையத்தின் கட்டுமான பணியும் இறுதிக் கட்டத்தில் உள்ளது.

ஆக இம்மையம் வரும் ஜனவரி 19ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக திறக்கப்படவுள்ளது.

என்னுடன் இணைந்து மஇகா தேசியத் தலைவர் டான்ஶ்ரீ விக்னேஸ்வரன், துணைத் தலைவர் டத்தோஶ்ரீ சரவணன் ஆகியோர் இம்மையத்தை திறந்து வைக்கவுள்ளனர்.

அதே நாளில் மஹிமாவும் ஶ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானமும் இணைந்து மாபெரும் பொங்கள் விழாவை ஏற்பாடு செய்துள்ளது.

ஆக பொதுமக்கள் அனைவரும் இந்நிகழ்வுகளில் கலந்து கொள்ளுமாறு டான்ஶ்ரீ நடராஜா கேட்டுக் கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset