நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நேதான்யாகுவுக்கு எதிராக கைது ஆணை பிறப்பித்த ஐசிசியின் முடிவு நியாயமானது: பிரதமர்

கோலாலம்பூர்:

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுக்கு எதிராக கைது ஆணை பிறப்பித்த ஐசிசியின் முடிவு நியாயமானது.

பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, இஸ்ரேலின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் ஆகியோருக்கு எதிராக காஸா போர்க் குற்றம் தொடர்பாக  சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ஐசிசி) கைது ஆணையை பிறப்பித்துள்ளது.

இந்த கைது ஆணையை பிறப்பித்த ஐசிசியன் முடிவு நியாயமானது.

மேலும் உலக நீதித்துறை அமைப்பின் நடவடிக்கை சட்டம், கொடுங்கோன்மை, அடக்குமுறை, இஸ்ரேலிய ஆட்சியின் தொடர்ச்சியான கொலைகள் ஆகியவற்றின் அடிப்படையிலானது.

எனவே இந்த முடிவை நாங்கள் வரவேற்கிறோம்.

சம்பந்தப்பட்ட இரண்டு இஸ்ரேலிய தலைவர்கள் வெளிநாடுகளுக்கு வருகை தந்தால் அவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்ற நடவடிக்கைக்கு நாங்கள் உடன்படுகிறோம்.

வெள்ளிக்கிழமை தொழுகையை நிறைவேற்றிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset