நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோலாலம்பூர் - சிங்கப்பூர் அதிவேக ரயில் திட்டம் குறித்து முடிவு எடுக்கப்படவில்லை: அமிர் ஹம்ஸா

கோலாலம்பூர்:

 கோலாலம்பூர்-சிங்கப்பூர் அதிவேக ரயில் திட்டத்தை உயிர்ப்பிப்பது குறித்து இன்னும் விவாதிக்கப்படவில்லை.

இரண்டாவது நிதியமைச்சர் டத்தோஶ்ரீ  அமிர் ஹம்ஸா அஸிஸான் தெரிவித்து உள்ளார்.

நடப்பில் உள்ள கெம்மாஸ்-ஜொகூர் பாரு ரயில் திட்டம், ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதைத் திட்டம் போன்றவற்றின் மீது கவனம் செலுத்துவதில் அமைச்சரவை முன்னுரிமை அளிப்பதாக அவர் கூறியுள்ளார்.

தற்போது நடப்பில் உள்ள திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

எனவே, கெம்மாஸ்-ஜோகூர் பாரு மற்றும் ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதைத் திட்டங்களின் மீது கவனம் செலுத்த வேண்டி உள்ளது.

மேலும் கோலாலம்பூர்-சிங்கப்பூர் அதிவேக ரயில் திட்டம் மீது ஆய்வு நடத்தப்பட்டது. 

இருப்பினும், அது தொடர்பாக அமைச்சரவை மட்டத்திலான விவாதம் எதுவும் இதுவரை நடைபெறவில்லை. அமைச்சரவையின் முடிவுக்காகக் காத்திருக்கிறோம் என்றார்.

அதிவிரைவு ரயில் திட்டத்திற்கான சாத்தியம் குறித்த அமைச்சரவை முடிவுக்குப் பிறகு, ஆண்டிறுதிக்குள் அது தொடர்பாக சிங்கப்பூரிடம் பேசப்படும் என்று மலேசிய போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் இதற்கு முன்னர் கூறியிருந்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset