நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

நேட்டோ படையினரை தலிபான்கள் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு

காபூல்:

ஆப்கானிஸ்தானில் தாக்குதல்களுக்கான நேரம் முடிந்துவிட்டது எனவும் தங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் எனவும் நேட்டோ படையினரிடம் தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஆப்கன் ஊடகத்துக்கு தலிபான்களின் தலைமை செய்தித் தொடர்பாளர் ஸபிஹுல்லா முஜாஹித் அளித்த பேட்டி:

ஆப்கானிஸ்தானில் நேட்டோ படையினர் படுதோல்வி அடைந்தது அவர்களுக்கு வேதனை அளிப்பதாக இருக்கும். எங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கான நேரம் முடிந்துவிட்டது என்பதை நேட்டோ படையினர் புரிந்துகொள்ள வேண்டும்.

கடந்த 20 ஆண்டுகளில் ராணுவ ரீதியில் நேட்டோ எடுத்து வந்த நடவடிக்கைகள் எந்தப் பலனையையும் அளிக்கவில்லை. இதன் மூலம், தாக்குதல்களைவிட எங்களுடன் ராஜீய ரீதியில் பேச்சுவார்த்தை நடத்துவதான் உகந்தது என்பது நிரூபணம் ஆகியுள்ளது.

வல்லரசு நாடுகள் மறைமுகப் போர் நிகழ்த்தும் களமாக ஆப்கானிஸ்தானைப் பயன்படுத்துவதற்கு நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.

மேலும், ஆப்கன் உள்நாட்டு விவகாரங்களில் பிற நாடுகள் தலையிடுவதையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். பாகிஸ்தான் உள்பட அனைத்து நாட்டுக்கும் இது 100 சதவீதம் பொருந்தும்.

எரிபொருள் மற்றும் உணவுப் பொருள்கள் ஏற்றுமதி, ரயில் போக்குவரத்து, எல்லைப் பாதுகாப்பு போன்ற பல்வேறு விவகாரங்களில் ஈரானுடன் கடந்த வாரம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளோம் என்றார் அவர்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset