நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

‘கேப்டன் பிரபா’ கும்பலின் மீதமுள்ள உறுப்பினர்களை வெளிநாடுகளில் தேடுகிறது மலேசிய போலிஸ் படை: டத்தோ குமார்

கோலாலம்பூர்:

‘கேப்டன் பிரபா’ குற்றக் கும்பலின் மீதமுள்ள உறுப்பினர்கள் உட்பட, அதிகாரப்பூர்வமற்ற வழிகளின் மூலம் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளதாக நம்பப்படும் சந்தேகநபர்களை மலேசிய அரச காவல் படை (PDRM) தீவிரமாக தேடி வருகிறது என்று உறுதிப்படுத்தியுள்ளது.

இன்னும் கைது செய்யப்படாத சில சந்தேகநபர்கள் உள்ளனர் என்றும், ‘ஆப்ஸ் ஜாக் ஸ்பேரோ’ (Ops Jack Sparrow) நடவடிக்கையின் கீழ் அவர்களைக் கண்டறியும் முயற்சி தீவிரமாக நடைபெற்று வருகிறது என்று புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) இயக்குநர், டத்தோ எம் குமார் தெரிவித்தார்.

“நாங்கள் அவர்களைத் தொடர்ந்து தேடி வருகிறோம். அவர்களில் சிலர் அதிகாரப்பூர்வமற்ற வழிகளின் மூலம் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளதாக நாங்கள் நம்புகிறோம்.

ஆனால் ஒன்று மட்டும் கூற விரும்புகிறேன். நீங்கள் தப்பிச் செல்லலாம், ஆனால் எங்கள் காவல் படையிடமிருந்து என்றும் மறைந்து இருக்க முடியாது.

எங்களிடமிருந்து நீங்கள் மறைய முடியாது. நாங்கள் உங்களைத் தொடர்ந்து பிடிப்போம்,”
என்று இவ்வாண்டு தைப்பூச விழாவை முன்னிட்டு, பத்து மலையில் உள்ள ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மலேசிய அரசு காவல் துறையின் தண்ணீர் பந்தலில் நடைபெற்றச் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார்.

மேலும், குற்றச் செயல்களில் ஈடுபட்ட எந்த நபரானாலும், அவர்கள் எந்த இடத்தில் இருந்தாலும், அவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அந்த குற்றக் கும்பலின் வலையமைப்பை முழுமையாக ஒழிக்கும் வரை நடவடிக்கைகள் தொடரும் என்றும் அவர் கூறினார்.

முன்னதாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தியாவின் மும்பையில் கைது செய்யப்பட்ட மூன்று குற்றவாளிகள், நாடு திரும்பிய உடனே கடந்த புதன்கிழமை செப்பாங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர்.

புக்கிட் அமான் குற்ற விசாரணைத் துறை இயக்குநர் டத்தோக் எம். குமார் கூறியதாவது, ‘ஆப்ஸ் ஜாக் ஸ்பேரோ’ நடவடிக்கையின் கீழ், அமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் தொடர்புடைய மூன்று முக்கிய சந்தேகநபர்கள் வெற்றிகரமாக கைது செய்யப்பட்டதாக மேலும் பேசிய டத்தோ எம். குமார் தெரிவித்துள்ளார்.

மேலும், 2026 ஜனவரி 14 அன்று சிப்பாங் செஷன்ஸ் நீதிமன்றம் பிறப்பித்த கைது வாரண்ட் அடிப்படையில், அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

- சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset