நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பத்துமலைக்கு வருகை தந்த போக்குவரத்து அமைச்சரை டத்தோ சிவக்குமார் வரவேற்று சிறப்பித்தார்

பத்துமலை:

போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக், பத்துமலை ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி ஆலயத்திற்கு மரியாதை நிமித்தமாக வருகை தந்தார்.

கோலாலம்பூர் ஸ்ரீ மாரியம்மன் தேவஸ்தான அறங்காவலர் டத்தோ சிவக்குமார் நடராஜா, நிர்வாக உறுப்பினர்கள் அவரை வரவேற்று சிறப்பித்தனர்.

இந்த வருகை, இந்த நாட்டில் பல இன சமூகத்தின் நல்லிணக்கத்தையும் நல்வாழ்வையும் வளர்க்கும் முயற்சியில் மத நிறுவனங்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான நெருங்கிய உறவையும் நல்ல ஒத்துழைப்பையும் பிரதிபலிக்கிறது.

மேலும் அமைச்சருடன் போக்குவரத்து அமைச்சின் தலைமை செயலாளர் டத்தோஸ்ரீ ஜனசந்திரனும் வந்திருந்தார்.

குறிப்பாக பத்துமலை கேடிஎம் ரயில் நிலையத்தை அமைச்சர் பார்வையிட்டார்.

அதே வேளையில் ரயில் நிலைய பயனர்களுடன் நேரடியாக உரையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset