நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சாலையின் இரட்டை கோட்டில் ஆபத்தான ஓட்டம்: வைரலான ‘பிங்க் பஸ்’ குறித்து JPJ விசாரணை

மலாக்கா:

சாலையின் இரட்டை கோட்டில் சட்டவிரோதமாக முந்திச் சென்றதாகக் கூறப்படும் ‘பிங்க் பஸ்’ ஓட்டுநர் தொடர்பான வைரல் வீடியோ குறித்து மலாக்கா சாலை போக்குவரத்து துறை (JPJ) விசாரணை நடத்தி வருகிறது.

இரண்டு நாட்களுக்கு முன் சமூக ஊடகங்களில் வைரலான 14 விநாடிகள் கொண்ட காணொலியில், கிளெபாங் பகுதியில் , இளஞ்சிவப்பு நிற பேருந்து  ஒன்று பெரோடுவா மைவி ரக வாகனத்தை இரட்டை கோட்டில் முந்திச் செல்வது பதிவாகியுள்ளது. இதனால், அந்த காரின் ஓட்டுநர் இடதுபுறம் விலகி வழி விட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மலாக்கா JPJ இயக்குநர் சித்தி ஸரினா முஹம்மது யூசோப் கூறுகையில், சமூக ஊடகங்களில் வைரலான இந்த வீடியோவைத் தொடர்ந்து, 1987 ஆம் ஆண்டு சாலை போக்குவரத்து சட்டத்தின் பிரிவு 114ன் கீழ், சம்பந்தப்பட்டப் பேருந்தின் உரிமையாளர் நிறுவனத்திற்கு விசாரணை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்று மலாக்கா JPJ இயக்குநர் சித்தி ஸரினா முஹம்மது யூசோப் கூறினார்.

“குற்றம் உறுதி செய்யப்பட்டால், P(22) சமன் நோட்டீஸ் வழங்கப்படும்,” என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

மேலும், சம்பந்தப்பட்ட ஓட்டுநரிடம் மேற்கொள்ளப்படும் விசாரணையின் முடிவுகளின் அடிப்படையில், கூடுதல் நடவடிக்கைகள், குற்றச்சாட்டுகள் விதிக்கப்படலாம் என்றும் அவர் கூறினார்.

இதற்கு முன், 2025 ஆம் ஆண்டில் மலாக்காவில் இயங்கும் Bas.My அல்லது ‘பிங்க் பஸ்’ சேவையைச் சேர்ந்த பல சம்பவங்கள் வைரலானதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. அவற்றில் உயிரிழப்புக்குக் காரணமான விபத்துகள், ஆபத்தான ஓட்டம், போதைப்பொருள் பயன்படுத்தியதாகக் கண்டறியப்பட்ட ஓட்டுநர்கள் தொடர்பான வழக்குகளும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

- சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset