நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சட்டவிரோத இ-கழிவு கடத்தல்: 1.58 லட்சம் கிலோ எடை கொண்ட 6 கன்டெய்னர்கள் பறிமுதல்

கோலாலம்பூர்:

கிள்ளான் துறைமுகத்தில் செயல்படும் எல்லை கட்டுப்பாடு, பாதுகாப்பு நிறுவனம் (AKPS), நேற்று மாலை சுமார் 5 மணியளவில், மேற்குப் போர்ட் கிள்ளான் துறைமுகத்தில் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட சுமார் 1,58,167 கிலோகிராம் (kg) எடையுள்ள இ-கழிவுகளை ஏற்றி வந்த ஆறு கன்டெய்னர்களைத் தடுத்து வைத்துள்ளது.

பல்வேறு அரசுத்துறைகள் இணைந்து நடத்திய ஒருங்கிணைந்த நடவடிக்கையின் போது, ஒன்பது கன்டெய்னர்களில் மேற்கொள்ளப்பட்ட உடற் பரிசோதனையின் மூலம் இந்தக் கண்டுபிடிப்பு ஏற்பட்டதாக AKPS தலைமை இயக்குநர், டத்தோ ஸ்ரீ முஹம்மது ஷுஹைலி முஹம்மது ஸைன் தெரிவித்தார்.

இந்த நடவடிக்கையைப் போர்ட் கிள்ளான் AKPS தளபதி டத்தோ நிக் எசானி முஹம்மது ஃபைசல் தலைமையிலான குழு மேற்கொண்டது.

“சோதனையின் போது, சுற்றுச்சூழல் தரச் சட்டத்தின் கீழ் இறக்குமதி செய்ய தடை செய்யப்பட்டப் பொருட்களை ஏற்றி வந்த ஆறு கன்டெய்னர்களை நாங்கள் பறிமுதல் செய்தோம்.

அதில் ஐந்து கன்டெய்னர்களில் மின்சாதன கழிவுகள் (e-waste) — சுற்று பலகைகள், ஃபியூஸ், தொழிற்துறை ஃபியூஸ், தாமிரம் போன்றவை இருந்தன. மற்றொரு கன்டெய்னரில் தாமிர கம்பிகள் இருந்தன. இவை அனைத்தும் சேர்த்து சுமார் 1,58,167 கிலோகிராம் எடையுள்ளது,” என்று அவர் தெரிவித்தார்.

1974 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் தரச் சட்டத்தின் படி, இவ்வகை ஆபத்தான கழிவுகளை நாட்டுக்குள் கொண்டு வருவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், சுற்றுச்சூழல் துறை (JAS) வழங்கும் அறிவிப்பை எதிர்பார்த்து, இந்தக் கன்டெய்னர்கள் பாதுகாப்பான பகுதியில் தற்காலிகமாக வைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

“தடை செய்யப்பட்டக் கழிவுகளை ஏற்றி வந்ததாகச் சந்தேகிக்கப்படும் கன்டெய்னர்களைத் தொடர்ந்து சோதனை செய்து, நாட்டின் எல்லைப் பாதுகாப்பு, தேசிய நலனை உறுதிப்படுத்த AKPS தனது கட்டுப்பாடு, அமலாக்க நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தும்,” என்றும் அவர் கூறினார்.

கடந்த செவ்வாய்க்கிழமை, கிள்ளான் துறைமுகம் AKPS சம்பந்தப்பட்ட துறைகளுடன் இணைந்து, சுமார் 1,25,037 கிலோகிராம் எடையுள்ள இ-கழிவுகள் மற்றும் தொழிற்துறை, வணிகக் கழிவுகளை ஏற்றி வந்த  ஐந்து கன்டெய்னர்களையும் பறிமுதல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

- சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset