நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தைப்பூச விழாவை சமய நெறியோடு கொண்டாடுவோம்: டத்தோ சரவணக்குமார்

நீலாய்:

முருகப் பெருமானுக்கான தைப்பூச விழாவை அனைவரும் சமய நெறியோடு கொண்டாட வேண்டும்.

சிரம்பான் தொகுதி பெர்சத்து சயாப் பிரிவுத் தலைவரும் நீலாய் சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளருமான டத்தோ சரவணக்குமார் இதனை வலியுறுத்தினார்.

தைப்பூச விழா வரும் பிப்ரவரி 1ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது.

இதில் தைப்பூசத்திற்கு தாய் கோவிலாக விளங்கும் பத்துமலை இவ்விழா மிகவும் கோலாகலமாக் கொண்டாடவுள்ளது.

வெள்ளி ரதம் பத்துமலையை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது. 

அதே வேளையில் பத்துமலை தைப்பூச விழாவில் 3.5 மில்லியன் பேர் கூடுவார்கள் என்று ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின்  தலைவர் டான்ஸ்ரீ  நடராஜா  அறிவித்துள்ளார்.

ஆகவே  தைப்பூசத் திருநாளை இந்து சமய மக்களாகிய நாம் அனைவரும் சமயநெறி வழுவாமல் அதேவேளை பாரம்பரியத் தன்மை குன்றாமல் சிறப்பான முறையில் கொண்டாட வேண்டும். வேண்டுதலை நிறைவேற்றும் பக்தர்கள் முருகப்பெருமானுக்கு உகந்த காவடிகளை எடுக்க வேண்டும். 

மேலும் பத்துமலை தைப்பூசத்தில் பக்தர்களுக்கு பல அமைப்புகள் இலவசமாக அன்னதானம் வழங்குகிறது. 

அன்னதானத்தை சாப்பிட்டதும் அதன் பொட்டலங்களை குப்பைத் தொட்டிகளில் போட வேண்டும். 

கண்ட கண்ட இடங்களில் குப்பைகளை போடுவதை நாம் தவிர்த்து கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset