செய்திகள் மலேசியா
இடியுடன் கூடிய கனமழை: ஆறு மாநிலங்களுக்கு வானிலை எச்சரிக்கை
கோலாலம்பூர்:
நாட்டில் ஆறு மாநிலங்களில் இன்று இரவு 11 மணி வரை இடியுடன் கூடிய கனமழை, பலத்த காற்று வீசும் என மலேசிய வானிலை ஆய்வு துறை (MetMalaysia) எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று பிற்பகல் 5.00 மணிக்கு வெளியிடப்பட்ட அறிவிப்பில், சிலாங்கூர் மாநிலத்தின் கோல சிலாங்கூர், ஹுலு சிலாங்கூர், கிள்ளான், கோம்பாக், பெட்டாலிங் பகுதிகளிலும், கோலாலம்பூரிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பேராக் மாநிலத்தின் லாருட், மாதாங், செலாமா, குவாலா காங்சார், கிந்தா, காம்பார் மற்றும் பத்தாங் பாடாங் பகுதிகளுக்கும், பஹாங் மாநிலத்தின் கேமரன் ஹைலண்ட்ஸ் பகுதிக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சரவாக்கில் குச்சிங், செரியான், சமராஹான் (சமராஹான், அசாஜாயா) பகுதிகள் பாதிக்கப்படாக்கூடும் என கூறப்பட்டுள்ளது.
சபாவில் உள் நிலப்பகுதிகளான சிப்பிடாங், பியூஃபோர்ட் மற்றும் மேற்கு கடற்கரைப் பகுதிகளான பாப்பார், புத்தாத்தான், பெனம்பாங், கோடத்தா கினபாலு, துவாரான், கோத்தா பெலுட் ஆகிய இடங்களும் இதில் அடங்கும்.
- சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
January 31, 2026, 6:42 pm
பெண்ணின் அந்தரங்க வீடியோ, புகைப்படங்களை வெளியிடுவதாக மிரட்டிய வெளிநாட்டவர் கைது
January 31, 2026, 5:59 pm
கூர்மையான ஞானவேல் கொண்டு நவீன உலகின் சவால்களை வெல்வோம்: டத்தோஸ்ரீ ரமணன்
January 31, 2026, 5:14 pm
சாலையின் இரட்டை கோட்டில் ஆபத்தான ஓட்டம்: வைரலான ‘பிங்க் பஸ்’ குறித்து JPJ விசாரணை
January 31, 2026, 4:25 pm
சட்டவிரோத இ-கழிவு கடத்தல்: 1.58 லட்சம் கிலோ எடை கொண்ட 6 கன்டெய்னர்கள் பறிமுதல்
January 31, 2026, 2:43 pm
‘கேப்டன் பிரபா’ கும்பலின் மீதமுள்ள உறுப்பினர்களை வெளிநாடுகளில் தேடுகிறது மலேசிய போலிஸ் படை: டத்தோ குமார்
January 31, 2026, 2:13 pm
பத்துமலைக்கு வருகை தந்த போக்குவரத்து அமைச்சரை டத்தோ சிவக்குமார் வரவேற்று சிறப்பித்தார்
January 31, 2026, 12:47 pm
