நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

50 SIM Box, 5,000 சிம் கார்டுகள் கைப்பற்றி இணைய மோசடிகளுக்குப் முற்றுப்புள்ளி வைத்த போலிஸ்

கோலாலம்பூர்: 

இணைய மோசடி, குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்தப்பட்டதாகச்  சந்தேகிக்கப்படும் 50 SIM Box கருவிகள், 5,000 சிம் கார்டுகள், தொடர்புடைய உபகரணங்கள் விசாரணைக்காக பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

 இந்தப் பறிமுதல் நடவடிக்கை  மலேசிய அரச காவல்துறை (PDRM) உடன் இணைந்து கஜாங்கில் நடைபெற்றதாக மலேசிய தொடர்பு, பல்லூடக ஆணையம் (MCMC) ஒரு அறிக்கையில் தெரிவித்தது.

இந்த நடவடிக்கையும் விசாரணையும் முழுமையாக PDRM தலைமையில் மேற்கொள்ளப்பட்டதாகவும், MCMC, 1998 ஆம் ஆண்டின் தொடர்பாடல், பல்லூடகச் சட்டம், 2000 ஆம் ஆண்டின் தொழில்நுட்ப தர விதிமுறைகளின் கீழ் விசாரணை நடத்தியதாகவும் கூறியது.

“இணையத் தளங்களின் பாதுகாப்பு கட்டுப்பாடுகளை மீறி இணைய மோசடி உள்ளிட்ட குற்றச் செயல்களை எளிதாக்க, வெளிநாட்டு சிம் கார்டுகள் உட்பட இந்த SIM Box கருவிகள் பெருமளவில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

“தொலைத்தொடர்பு சாதனங்களின் தவறான பயன்பாடு, நாட்டின் தொடர்பாடல் வலையமைப்பின் நம்பகத்தன்மைக்கும் பயனர்களின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக உள்ளது,” என்று MCMC இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

588-வது சட்டத்தின் 239-வது பிரிவின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக RM100,000 வரை அபராதம் அல்லது இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

இணைய மோசடிகளுக்காக SIM Box, சிம் கார்டுகளைப் பயன்படுத்துவது, நாட்டின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாக MCMC வலியுறுத்தியது.

“இணைய பாதுகாப்பை உறுதி செய்ய, தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள் சிம் கார்டு பதிவு நடைமுறைகளை மேலும் கடுமையாக்க வேண்டும்,” என்றும் அது தெரிவித்தது.

- சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset