செய்திகள் மலேசியா
பெண்ணின் அந்தரங்க வீடியோ, புகைப்படங்களை வெளியிடுவதாக மிரட்டிய வெளிநாட்டவர் கைது
தவாவ்:
ஒரு பெண்ணின் தனிப்பட்ட அந்தரங்க வீடியோ, புகைப்படங்களைச் சமூக ஊடகங்களில் வெளியிடுவதாக மிரட்டியதாக சந்தேகிக்கப்படும் வெளிநாட்டு குடிமகன் ஒருவரை போலீசார் 24 மணி நேரத்திற்குள் கைது செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் நேற்று இங்குள்ள கம்போங் மெரோத்தாய் பெசார் பகுதியில் நிகழ்ந்துள்ளது.
தவாவ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உதவி ஆணையர் ஜாஸ்மின் ஹுசின் கூறுகையில், சுமார் 30 வயதுடைய அந்தச் சந்தேகநபர், கம்போங் மெரோத்தாய் பெசார் உணவகத்தின் அருகில், "Bombalai" காவல் நிலையத்தைச் சேர்ந்த காவல் துறையினரால் மாலை 5.45 மணியளவில் கைது செய்யப்பட்டதாக தவாவ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உதவி ஆணையர் ஜாஸ்மின் ஹுசின் கூறினார்.
சுமார் 20 வயதுடைய பெண் ஒருவர், காலை 10.35 மணியளவில் புகார் அளித்ததைத் தொடர்ந்து இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அவர், தனக்கு அறிமுகமான நபர் என்றும் பல தொலைபேசி எண்கள் மூலம் தொடர்பு கொண்டு, பணம் வழங்காவிட்டால் தனது தனிப்பட்ட வீடியோ, புகைப்படங்களை வைரலாக்குவதாக மிரட்டியதாகப் புகாரில் தெரிவித்துள்ளார்.
“சந்தேகநபர் இரவு நேரங்களில் அடிக்கடி அப்பெண்ணைத் தொடர்பு கொண்டு தொந்தரவு செய்து அவரது குடும்பத்தில் பிரச்னையை ஏற்படுத்த முயன்றுள்ளார்.
“தனிப்பட்ட தகவல்கள் வெளியிடப்படும் என்ற பயத்தால், பாதிக்கப்பட்டவர் சந்தேகநபருக்கு சிலமுறை பணம் வழங்கியதாக கூறியுள்ளார்,” என்று அவர் தெரிவித்தார்.
மேலும், சந்தேகநபரின் உடைமைகளைச் சோதனை செய்தபோது, சுமார் 16 செ.மீ நீளமுள்ள ஒரு கத்தி, இரண்டு கைப்பேசிகள் அவரது பையில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அவை மிரட்டலுக்கு பயன்படுத்தப்பட்டதாகவும் நம்பப்படுவதாக அவர் கூறினார்.
தற்போது சந்தேகநபர் விசாரணைக்காக தடுப்புக்கு காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், இந்த வழக்கு குற்றச் சட்டம் பிரிவு 506 (குற்றமிரட்டல்) மற்றும் குடிவரவு சட்டம் 1959/63 பிரிவு 6(1)(c) கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் மேலும் பேசிய அவர் தெரிவித்தார்.
- சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
January 31, 2026, 5:59 pm
கூர்மையான ஞானவேல் கொண்டு நவீன உலகின் சவால்களை வெல்வோம்: டத்தோஸ்ரீ ரமணன்
January 31, 2026, 5:14 pm
சாலையின் இரட்டை கோட்டில் ஆபத்தான ஓட்டம்: வைரலான ‘பிங்க் பஸ்’ குறித்து JPJ விசாரணை
January 31, 2026, 4:25 pm
சட்டவிரோத இ-கழிவு கடத்தல்: 1.58 லட்சம் கிலோ எடை கொண்ட 6 கன்டெய்னர்கள் பறிமுதல்
January 31, 2026, 2:43 pm
‘கேப்டன் பிரபா’ கும்பலின் மீதமுள்ள உறுப்பினர்களை வெளிநாடுகளில் தேடுகிறது மலேசிய போலிஸ் படை: டத்தோ குமார்
January 31, 2026, 2:13 pm
பத்துமலைக்கு வருகை தந்த போக்குவரத்து அமைச்சரை டத்தோ சிவக்குமார் வரவேற்று சிறப்பித்தார்
January 31, 2026, 12:47 pm
50 SIM Box, 5,000 சிம் கார்டுகள் கைப்பற்றி இணைய மோசடிகளுக்குப் முற்றுப்புள்ளி வைத்த போலிஸ்
January 31, 2026, 12:40 pm
தைப்பூச விழாவை சமய நெறியோடு கொண்டாடுவோம்: டத்தோ சரவணக்குமார்
January 31, 2026, 11:33 am
