செய்திகள் கலைகள்
ஷாருக்கானுக்கு மிரட்டல் விடுத்த வழக்கறிஞர் கைது
புது டெல்லி:
நடிகர் ஷாரூக் கானிடம் ரூ. 50 லட்சம் கோரி கொலை மிரட்டல் விடுத்ததாக சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரைச் சேர்ந்த வழக்குரைஞரை மும்பை போலீஸார் கைது செய்தனர்.
இந்த கொலை மிரட்டல் தொலைபேசி வழக்கை மும்பை பாந்த்ரா போலீஸார் கடந்த 5ஆம் தேதி பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
சத்தீஸ்கரை சேர்ந்த வழக்கறிஞர் ஃபைசன்னின் தொலைபேசியில் இருந்து கொலை மிரட்டல் வந்தது தெரிய வந்தது.
ஆனால் ஃபைசன் கானின் செல்போன் தொலைந்து போய்விட்டதாகவும் இது தொடர்பாக ராய்பூர் காவல் நிலையத்தில் கடந்த 2ஆம் தேதி புகார் அளித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
எனினும், தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அவர் கூறியது பொய் என்பதும் ஷாரூக் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்து பேசியதும் அவர்தான் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து ஃபைசன் கானை மும்பை போலீஸார் கைது செய்தனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
June 8, 2026, 12:41 pm
பி.எஸ்.எஃப் வீரர்களைக் கவுரவிக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி
June 7, 2026, 11:10 am
சலீம் குமார்.: கேரளாவின் பிரபலமான நடிகர் காலமானார்
June 3, 2026, 4:34 pm
BTS இசைக் கச்சேரி: முன்பதிவு தொடக்கம்
May 30, 2026, 8:07 pm
நடிகர் அஜித்குமாரின் தாயார் காலமானார்
May 24, 2026, 3:40 pm
மாரி செல்வராஜ் தயாரிக்கும் புதிய படத்தில் அமீர்
May 21, 2026, 5:29 pm
