நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

நடிகர் சூர்யாவின் கங்குவா திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது 

சென்னை: 

நடிகர் சூர்யாவின் 42ஆவது படமான கங்குவா திரைப்படம் நாளை நவம்பர் 14ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது
 
கங்குவா திரைப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது 

இயக்குநர் சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் இசையமைப்பாளர் தேவி ஶ்ரீ பிரசாத் இசையில் கங்குவா பிரம்மாண்டமாக வந்துள்ளது 

மலேசியாவில் கங்குவா திரைப்படத்தை DMY CREATIONS நிறுவனம் வாங்கி வெளியீடு செய்கிறது 

நூற்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் கங்குவா திரைப்படம் வெளியீடு காணவுள்ளதால் இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது 

மேலும், கங்குவா திரைப்படம் 3டி தொழில்நுட்பத்திலும் வெளியிடுவதாக படக்குழுவினர் அண்மையில் தெரிவித்திருந்தனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset