
செய்திகள் மலேசியா
லங்காவி சுற்றுலா பயணிகளுக்கு இனி பரிசோதனை தேவை இல்லை: சுகாதார அமைச்சு
லங்காவி:
லங்காவி தீவுக்கு சுற்றுலா மேற்கொள்ளும் பயணிகள் இனி கொரோனா பரிசோதனை செய்துகொள்ளத் தேவை இல்லை என்றும், அது இனி கட்டாயம் அல்ல என்றும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
மலேசியாவில் மாநிலங்களுக்கு இடையேயான பயணங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதை அடுத்து, லங்காவி தீவு சுற்றுலா பயணிகளுக்கான பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதின் விளக்கம் அளித்துள்ளார்.
இதையடுத்து நேற்று முதல் அமைச்சரின் இந்த அறிவிப்பு அமலுக்கு வந்துள்ளது. அதேவேளையில் பயணங்களுக்கு முன்பு பரிசோதனை செய்து கொள்வது நல்லது என அமைச்சர் கைரி அறிவுறுத்தினார்.
லங்காவி வரும் பயணிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது, அவர்களில் 54,341 பேரில் சுமார் 0.4 விழுக்காட்டினருக்கு மட்டுமே கொரோனா தொற்றுப் பாதிப்பு இருந்ததாகக் குறிப்பிட்டுள்ள அவர், இந்த முடிவுகளின் அடிப்படையிலேயே பயணக் கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டதாகக் கூறியுள்ளார்.
"முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களும் கூட பயணங்களுக்கு முன்பு தொற்றுப் பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள், தனிமைப்படுத்தலில் உள்ளவர்கள், பயணம் மேற்கொள்ள அனுமதி இல்லை," என்றார் அமைச்சர் கைரி.
தற்போதைய சூழலில் முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மட்டுமே மலேசியாவுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். அதேவேளையில் வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகளுக்காக மலேசிய எல்லைகள் இன்னும் திறக்கப்படவில்லை.
தொடர்புடைய செய்திகள்
July 1, 2025, 11:33 pm
மாணவி மணிஷாப்ரீத் கொலை வழக்கு; 48 மணி நேரத்திற்குள் தீர்க்கப்பட்டது: ஹுசைன் ஒமார் கான்
July 1, 2025, 11:28 pm
ஹிஷாமுடினின் இடைநீக்கம் குறித்து அம்னோ உச்சமன்றம் விவாதிக்கவில்லை: ஜாஹித்
July 1, 2025, 10:48 pm