நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

செத்தியூ ரிசோர்ட்டில் காலை உணவு சாப்பிட்ட 22 மாணவர்கள் வயிற்று வலி, வாந்தியால் பாதிப்பு

செத்தியூ:

செத்தியூவில் உள்ள ரிசோர்ட்டில் காலை உணவு சாப்பிட்ட 22 மாணவர்கள் வயிற்று வலி, வாந்தியால் பாதிப்படைந்தனர்.

திரெங்கானு மாநில கல்வித் துறையின் இயக்குநர் ஜெலானி சூசோங் இதனை கூறினார்.

குன்தோங் இடைநிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் சம்பந்தப்பட்ட ரிசோர்டில் காலை உணவு சாப்பிட்டனர்.

இதனைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 22 மாணவர்கள் வயிற்று வலி, வாந்தி போன்ற உபாதைகளால் பாதிக்கப்பட்டனர்.

ஆரம்பத்தில் எட்டு மாணவர்கள் இப் பிரச்சினையால் பாதிக்கப்படிருந்தனர். அவர்களுக்கு ஆசிரியர்கள் முதலுதவி வழங்கியும் பயனளிக்கவில்லை என்பதால் அம்மாணவர்கள் செத்தியூ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அதைத் தொடர்ந்து, செத்தியூ மாவட்ட சுகாதார அலுவலக அதிகாரிகள் உணவு மாதிரிகளை ஆய்வு செய்ததாக ஜெலானி கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset