நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அன்வார் அம்னோவை நேசிப்பதுடன் கட்சியை நம்புகிறார்: ஜாஹித்

கோலாலம்பூர்:

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் எட்டு அமைச்சரவை பதவிகளை ஒதுக்குவதன் மூலம் அம்னோவுக்கு தனது நம்பிக்கையை அளித்துள்ளார்.

இந்த முடிவு கட்சி மீதான தனது அன்பினால் உந்தப்பட்டதாக அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அஹ்மத் ஜாஹித் ஹமிடி கூறினார்.

டத்தோஸ்ரீ அன்வார் அம்னோவின் டிஎன்ஏவிலிருந்து பிறந்த ஒரு தலைவர்.

இதன் மூலம் நாட்டின் அரசியல் நிலப்பரப்பில் கட்சியின் வரலாறு, பங்கு, நிலைப்பாட்டை அவர் புரிந்து கொள்கிறார்.

மேலும் கெஅடிலானின் அழுத்தத்தை எதிர்கொள்கிறார்.

கட்சியில் சிலர் கெஅடிலான் தலைவர் அம்னோவுக்கு மிகவும் கீழ்ப்படிந்தவர் என்ற கருத்தைக் கொண்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

கெஅடிலானில் அவர்கள் பிரதமர் அம்னோ அழுத்தத்திற்கு அடிபணிந்ததாக குற்றம் சாட்டினர்

அம்னோ ஒருபோதும் அழுத்தம் கொடுக்கவில்லை. பிரதமரை பதவி விலகுமாறு ஒருபோதும் கேட்கவில்லை. 

அம்னோவுக்கு 26 இடங்களும், தேசிய முன்னணி கூட்டணி கட்சிகளுக்கு நான்கு இடங்களும் இருப்பதால் கற்பனை செய்து பாருங்கள், நமக்கு எத்தனை அமைச்சர் இடங்கள் கிடைக்கும்? என்று.

எனவே பிரதமர் நம் அனைவரையும் மிகவும் நேசிக்கிறார் என்பதை அனைத்து பிரதிநிதிகளுக்கும் தெரியப்படுத்த விரும்புகிறேன் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset