நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாட்டில் 4,619 வெள்ள பாதிப்பு இடங்கள் கணடறியப்பட்டுள்ளன: நட்மா

கோலாலம்பூர்:

வடகிழக்கு பருவமழைக்கு தயாராகும் வகையில் இந்த ஆண்டு நாடு முழுவதும் மொத்தம் 4,619 வெள்ள பாதிப்பு இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

நட்மா எனப்படும் தேசிய பேரிடர் மேலாண்மை பிரிவின் இயக்குநர் டத்தோ கைருல் ஷாரில் இட்ரிஸ் தெரிவித்தார்.

தீபகற்ப மலேசியாவில் 3,605 இடங்களும் சபாவில் 799 இடங்களும் சரவாக்கில் 201 இடங்களும் லாபுவானில் 14 இடங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில் மூன்று முறைக்குக் குறையாமல் வெள்ளத்தை சந்தித்த பகுதிகளின் அடிப்படையில் இந்த வெள்ள இடம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

அதே வேளையில் நாடு முழுவதும் உள்ள 254 சரிவான நிலப் பகுதிகளையும் நட்மா கண்காணித்து வருகிறது.

இதில் 86 உயர் சிக்கலான, 84 நடுத்தர முக்கியமான மற்றும் 84 குறைந்த அபாயத்தை கொண்ட இடங்களும் அடங்கும் என்று அவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset