
செய்திகள் மலேசியா
பிரான்ஸ் நீதிமன்றத்தின் தீர்ப்பு சபாவிற்கு மனநிறைவு அளிக்கிறது: டத்தோஶ்ரீ ஹஜிஜி நோர்
கோத்தா கினாபாலு:
தங்களை சூலு சுல்தானின் வாரிசுதாரர்கள் என்று கூறி கொள்ளும் தரப்பினர் மேற்கொண்ட சட்ட நடவடிக்கையை பிரான்ஸ் நீதிமன்றம் முழுவதுமாக நிராகரித்தது வரவேற்கத்தக்கது என்று சபா மாநில முதலமைச்சர் டத்தோஶ்ரீ ஹஜிஜி நோர் கூறினார்.
பிரான்ஸ் நீதிமன்றத்தின் தீர்ப்பு சபா மாநிலத்திற்கு மனநிறைவை அளித்திருப்பதாக அவர் சொன்னார்.
சபா மாநிலத்தின் மீது யாரும் உரிமை கோர முடியாது. காரணம், சபா மாநிலம் மலேசியாவின் கூட்டமையில் இருக்கிறது. ஓர் இறையாண்மை கொண்ட மாநிலமாக சபா விளங்குகிறது என்று அவர் ஓர் ஊடக அறிக்கையின் வாயிலாக சொன்னார்.
சபா மாநிலம் தொடர்பான சட்ட விவகாரங்களில் மலேசியாவிற்குச் சாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது குறித்து பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கும் சட்டம், கழக சீர்த்திருத்த பிரதமர் துறை அமைச்சர் டத்தோஶ்ரீ அஸாலினா ஒத்மான், ஒற்றுமை அரசாங்கம் அனைவருக்கும் டத்தோஶ்ரீ ஹஜிஜி நோர் நன்றி தெரிவித்து கொண்டார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 1, 2025, 11:33 pm
மாணவி மணிஷாப்ரீத் கொலை வழக்கு; 48 மணி நேரத்திற்குள் தீர்க்கப்பட்டது: ஹுசைன் ஒமார் கான்
July 1, 2025, 11:28 pm
ஹிஷாமுடினின் இடைநீக்கம் குறித்து அம்னோ உச்சமன்றம் விவாதிக்கவில்லை: ஜாஹித்
July 1, 2025, 10:48 pm
பள்ளிக்கு முன் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஆடவர் உயிர் தப்பினார்
July 1, 2025, 1:08 pm