நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

UPNMஇல் பகடிவதை சம்பவம்: கேடட் அதிகாரி குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார் 

கோலாலம்பூர்: 

சூடான இரும்பு பெட்டியை தனது ஜூனியர் மாணவனின் நெஞ்சில் வைத்து காயம் விளைவித்த குற்றத்திற்காக UPNM பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கேடட் அதிகாரி அமிரூல் இஸ்கண்டார் நோர்ஹனிஸான் இன்று கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். 

இருப்பினும், 22 வயதான அமிரூல் இஸ்கண்டார் தமக்கெதிரான குற்றங்களை மறுத்து அவர் விசாரணை கோரினார். 

குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை, அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம், 

இருவர் உத்தரவாதத்தின் பேரில் 20 ஆயிரம் ரிங்கிட் ஜாமின் தொகை அடிப்படையில் குற்றஞ்சாட்டப்பட்ட அமீருலுக்கு ஜாமின் வழங்க நீதிபதி எகுஸ்ரா அலி உத்தரவிட்டார். 

இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் டிசம்பர் 27ஆம் தேதி மீண்டும் செவிமடுக்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்தது. 

முன்னதாக, கடந்த அக்டோபர் 22ஆம் தேதி, UPNM மாணவர் தங்குமிடத்தில் 20 வயதான சல்மான் சைஃபுல் சுராஷ் எனும் மாணவனை வேண்டுமென்றே தாக்கி காயம் விளைவித்த சம்பவம் தொடர்பாக அமிரூல் மீது குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டிருந்தது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset