நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

1 நிமிடத்தில் 78 நாடுகளின் கொடிகளின் பெயரை சொல்லி மலேசிய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார் ஜேஸ்வீகன்

கோலாலம்பூர்:

ஒரு நிமிடத்தில் 78 நாடுகளின் கொடிகளின் பெயரை சொல்லி தமிழ்ப்பள்ளி மாணவர் ஜேஸ்வீகன் மலேசிய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.

ஜேஸ்வீகன் போன்ற  தமிழ்ப்பள்ளி மாணவர்களின் சாதனைகள் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று மஇகா மத்திய செயலவை உறுப்பினர் அன்ட்ரூ டேவிட் கூறினார்.

8 வயதுடைய ஜேஸ்வீகன் பாடாங் செராய் பாடாங் மேவா தோட்ட தமிழ்ப்பள்ளியில் பயின்று வருகிறார்.

இம் மாணவர் 1 நிமிடத்தில் 78 நாடுகளின் கொடியின் பெயர்களை சொல்லி மலேசிய சாதனையாளர்கள் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

இச் சாதனையைப் படிப்பதற்கு அவருக்கு உறுதுணையாக இருந்த அவரின் பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் எனது வாழ்த்துகள்.

அதே வேளையில் அம் மாணவரின் சாதனை அங்கீகரிக்கும் நோக்கில்தான் மஇகா பணிப்படை இன்றைய நிகழ்வை ஏற்பாடு செய்தது.

ஜேஸ்வீகனுக்கு மஇகா சார்பில் அன்பளிப்புகளும் வழங்கப்பட்டது.

மேலும் அடுத்தடுத்து ஜேஸ்வீகன் சாதனைகளை படைப்பதற்கான உரிய வழிகாட்டலையும் உதவியையும் மஇகா வழங்கும்.

அதே வேளையில் ஜேஸ்வீகன் போன்று தமிழ்ப்பள்ளி மாணவர்களின் சாதனைக்கு மஇகா எப்போதும் துனை நிற்கும் என்று அன்ட்ரூ டேவிட் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset