நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேசிய பேராசிரியர்கள் மன்றம் குறித்து அமைச்சரவை இன்னும் முடிவெடுக்கவில்லை: ஃபஹ்மி ஃபாட்சில் 

கோலாலம்பூர்: 

தேசிய பேராசிரியர்கள் மன்றம் குறித்தும் அதன் செயல்பாடுகள் குறித்தும் அமைச்சரவை இன்னும் முடிவெடுக்கவில்லை என்று தகவல், தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் கூறினார். 

இந்த மன்றத்தை பிரதமர் துறையின் கீழ் வைக்க இதற்கு முன் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் பரிந்துரை செய்திருந்ததாக அவர் தெரிவித்தார் 

ஆனால், எம்.பி.என் தொடர்பான எந்தவொரு முடிவும் எட்டப்படவில்லை. தேசிய பேராசிரியர்கள் மன்றம் அதன் நிதியை தவறாக பயன்படுத்தியதாக நாடாளுமன்ற சிறப்பு கணக்காய்வு குழு தெரிவித்தது. 

மேலும், தேசிய பேராசிரியர்கள் மன்றத்தை மலேசிய உயர்க்கல்வி அமைச்சின் கீழ் வைக்க பி.ஏ.சி தலைவர் மாஸ் எர்மியாத்தி இதற்கு முன் யோசனை வழங்கினார் குறிப்பிடத்தக்கது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset