நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புத்ராஜெயாவில் மகளிர் தொழில் முனைவோர் கண்காட்சி மகளிர் வர்த்தகர்களை மேம்படுத்தும்: டத்தோஸ்ரீ ரமணன்

புத்ராஜெயா:

புத்ராஜெயாவில் நடைபெறும் மகளிர் தொழில் முனைவோர் கண்காட்சி மகளிர் வர்த்தகர்களை நிச்சயம் மேம்படுத்தும்.

தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இந்த நம்பிக்கையை தெரிவித்தார்.

மகளிர் தொழில் முனைவோர் கண்காட்சி புத்ராஜெயா ஐஓஐ சிட்டி மால் மாநாட்டு மண்டபத்தில் இன்று தொடங்கியது.

மூன்று நாள் நிகழ்வில் பல்வேறு வணிகத் துறைகளைச் சேர்ந்த 100 கண்காட்சி கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இது உள்ளூர் மகளிர் தொழில் முனைவோர் உணர்வைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளது.

மேலும்  தொழில் முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சு மைமாலுடன் இணைந்து வனிதா - நோனா வார இதழால் இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கலைஞர்களின் படைப்புகள் உட்பட பல்வேறு சுவாரஸ்யமான போட்டிகள் இதில் இடம் பெற்றுள்ளன.

தேசிய பொருளாதாரத்தை இயக்கும் பெண் தொழில் முனைவோர் என்ற சுலோகத்துடன் இந்த கண்காட்சி நடைபெறுகிறது.

இக்கண்காட்சிவழி உள்ளூர் பெண் தொழில் முனைவோரை ஆதரிப்பதற்கான ஒரு தளமாக மட்டுமல்லாமல், அவர்கள் அறிவைப் பகிர்ந்து கொள்ளவும், நெட்வொர்க்கை உருவாக்கவும் அமைந்துள்ளது.

மலேசியப் பெண் தொழில் முனைவோராக அடையாள ஆளுமை உணர்வை வளர்க்கவும் இது வாய்ப்பளிக்கிறது.

இந்த நிகழ்வை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து உரையாற்றிய டத்தோஸ்ரீ ரமணன் இதனை தெரிவித்தார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset