நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

குளோபல் இக்வான் தொடர்புடைய பிள்ளைகள் இருக்கும் இடத்தைச் சரிபார்க்க பெற்றோர்களுக்கு எந்தத் தடையும் இல்லை: போலிஸ்

கோலாலம்பூர்:

குளோபல் இக்வான் தொடர்புடைய பிள்ளைகள் இருக்கும் இடத்தைச் சரிபார்க்க பெற்றோர்களுக்கு எந்தத் தடையும் இல்லை.

புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோஸ்ரீ முஹம்மத் ஷுஹைலி முஹம்மத் ஜைன்  இதனை தெரிவித்தார்.

மீட்கப்பட்ட குழந்தைகளை பெற்றோரிடம் இருந்து பிரிக்கவோ அல்லது ஓட ஓட விரட்டவோ போலிஸ் உத்தேசித்துள்ளது என்ற கேள்விக்கு இடமில்லை.

கடந்த செப்டம்பர் 11 ஆம் தேதி ஓப்ஸ் குளோபல் தொடங்கப்பட்டதிலிருந்து, சம்பந்தப்பட்ட எந்தவொரு பெற்றோரும் விசாரணைக்கு உதவ முன்வருமாறு போலிஸ் கேட்டுக் கொண்டுள்ளது.

அப் பிள்ளைகளை காக்க வேண்டியது காவல்துறையின் கடமையாக உள்ளது.

அதனால் சுகாதார அமைச்சு, சமூக நலத் துறை உட்பட அரசு இலாகாக்களின் ஸ்கிரீனிங் உட்பட பல நடைமுறைகளை போலிஸ் பின்பற்றுகிறது என்று அவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset