நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

லிம் குவான் எங் உடனான மானநஷ்ட வழக்கின் முடிவு ஏமாற்றமளிக்கிறது: டான்ஶ்ரீ மொஹைதீன் யாசின் கருத்து 

கோலாலம்பூர்: 

DAP கட்சி தலைவர் லிம் குவான் எங் தொடர்ந்த மானநஷ்ட வழக்கில் தமக்கு எதிரான தீர்ப்பு அளிக்கப்பட்டிருப்பது பெரும் ஏமாற்றத்தை அளிப்பதாக முன்னாள் பிரதமரும் தேசிய கூட்டணி தலைவருமான டான்ஶ்ரீ மொஹைதீன் யாசின் கருத்து கூறினார். 

வழக்கு தொடர்பான முடிவு ஏமாற்றம் அளிக்கப்பட்டாலும் தாம் நீதிமன்றத்தின் முடிவை மதிப்பதாக டான்ஶ்ரீ மொஹைதீன் யாசின் முகநூல் பதிவில் தெரிவித்தார். 

இந்நிலையில், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தாம் மேல்முறையீடு செய்வேன், இது தொடர்பான தனது வழக்கறிஞர்களுக்கு உத்தரவு தெரிவித்துள்ளதாக அவர் சொன்னார். 

முன்னதாக, லிம் குவான் எங் தொடர்ந்த மானநஷ்ட வழக்கில் அவதூறு கூற்றை வெளியிட்ட காரணத்தால் டான்ஶ்ரீ மொஹைதீன் யாசின் 1.35 மில்லியன் ரிங்கிட் பணத்தைச் செலுத்த வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset