செய்திகள் மலேசியா
11ஆவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு மலேசிய சிறு நடுத்தர வணிகர்களுக்கு பயனாக அமையும்: டான்ஸ்ரீ மாரிமுத்து
கோலாலம்பூர்:
உலகத் தமிழர் பொருளாதார மாநாடு மலேசிய சிறு நடுத்தர வணிகர்களுக்கு பயனாக அமையும் என்று அம்மாநாட்டின் ஏற்பாட்டுக் குழு துணைத் தலைவர் டான்ஸ்ரீ மாரிமுத்து கூறினார்.
11ஆவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு வரும் நவம்பர் 15, 16,17 ஆகிய மூன்று நாட்களுக்கு கேஎல்சிசி மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
மாநாட்டின் அமைப்பாளரும் தலைவருமான டாக்டர் விஆர்எஸ் சம்பத் இந்த மாநாட்டை தொடர்ச்சியாகவும் வெற்றிகரமாகவும் நடத்தி வருகிறார்.
உலக நாடுகளில் இருந்து பல முன்னணி வர்த்தகர்கள் இம்மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளனர்.
அதன் அடிப்படையில் இம்மாநாடு மலேசிய வர்த்தகர்களுக்கு பெரும் பயனாக அமையும்.
குறிப்பாக மலேசியாவில் உள்ள இந்திய சிறு நடுத்தர வணிகர்கள் தங்கள் வர்த்தகத்தை விரிவாக்கம்செய்யவும் வெளிநாடுகளில் இந்த வர்த்தக திட்டங்கள், முதலீடுகள் பெறுவதற்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
ஆக இம் மாநாடு மலேசிய வர்த்தகர்களுக்கு பெரும் வாய்ப்பாக அமையும் என்று என்று டான்ஸ்ரீ மாரிமுத்து கூறினார்.
முன்னதாக தேசிய நில நிதி கூட்டுறவு கழகத்தின் நிர்வாக இயக்குநர் டத்தோ சகாதேவன் மலேசிய ஏற்பாட்டாளராக உள்ளார்.
மேலும் தமிழக அரசின் மூத்த அமைச்சர் துரைமுருகன் இம்மாநாட்டை தொடக்கி வைக்கவுள்ளார்.
மலேசியாவிற்கான இந்திய தூதர் பிஎன் ரெட்டி இம்மாநாட்டிற்கு தலைமையேற்கவுள்ளார் என்று மாநாட்டு செயலாளர் விட்டல் கூறினார்.
கோலாலம்பூர் பொருளாதார வியூக மன்றத்தின் துணைத்தலைவரும் ஃபார்லிம் குழுமத்தின் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ முஹம்மத் இக்பால், கோலாலம்பூர் சிலாங்கூர் இந்திய வர்த்தக சபையின் தலைவர் நிவாஸ் ராகவன், டத்தோ டாக்டர் டெனிசன் ஜெயசூர்யா, டாக்டர் கலாநிதி வீராசாமி, அன்சாரி அஹ்மத் உட்பட பலர் உரையாற்றவுள்ளனர்.
ஆகவே மலேசிய இந்திய வர்த்தகர்கள் திரளாக வந்து இம்மாநாட்டில் கலந்து பயன் பெற வேண்டும்.
இம்மாநாடு குறித்த மேல்விவரங்களுக்கு www.economic-conference.com எனும் அகப்பக்கத்தை வலம் வரலாம் என்று விட்டல் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 8, 2024, 6:04 pm
செத்தியூ ரிசோர்ட்டில் காலை உணவு சாப்பிட்ட 22 மாணவர்கள் வயிற்று வலி, வாந்தியால் பாதிப்பு
November 8, 2024, 5:49 pm
நாட்டில் வேலையில்லாதோரின் விகிதம் குறைந்துள்ளது: தேசிய புள்ளியியல் துறை தலைவர் தகவல்
November 8, 2024, 5:47 pm
தேசிய பேராசிரியர்கள் மன்றம் குறித்து அமைச்சரவை இன்னும் முடிவெடுக்கவில்லை: ஃபஹ்மி ஃபாட்சில்
November 8, 2024, 5:27 pm
நாட்டில் 4,619 வெள்ள பாதிப்பு இடங்கள் கணடறியப்பட்டுள்ளன: நட்மா
November 8, 2024, 4:15 pm
1 நிமிடத்தில் 78 நாடுகளின் கொடிகளின் பெயரை சொல்லி மலேசிய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார் ஜேஸ்வீகன்
November 8, 2024, 3:31 pm
பிரான்ஸ் நீதிமன்றத்தின் தீர்ப்பு சபாவிற்கு மனநிறைவு அளிக்கிறது: டத்தோஶ்ரீ ஹஜிஜி நோர்
November 8, 2024, 3:01 pm
லிம் குவான் எங் உடனான மானநஷ்ட வழக்கின் முடிவு ஏமாற்றமளிக்கிறது: டான்ஶ்ரீ மொஹைதீன் யாசின் கருத்து
November 8, 2024, 1:32 pm
மால்பட் படையை மீட்டுக் கொள்ளும் சூழல் ஏற்பட்டால், அரசிடம் இரண்டாம் திட்டமுள்ளது: காலிட் நோர்டின்
November 8, 2024, 12:36 pm