நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இளைஞர் நாடாளுமன்ற தேர்தல் வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ளது: சபாநாயகர் ஜோஹாரி

கோலாலம்பூர்: 

இளைஞர் நாடாளுமன்ற பிரதிநிதித் தேர்தல் அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுவதாக சபாநாயகர் ஜோஹாரி அப்துல் காடிர் தெரிவித்தார்.

சீர்திருத்தங்களில் பொதுத் தேர்தல் போன்ற வாக்களிக்கும் முறையும், நாடு முழுவதும் உள்ள பொதுப் பல்கலைக்கழகங்கள் (UA) மற்றும் தனியார் உயர்க்கல்வி கூட மாணவர்களிடையே தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதி நியமனங்களும் அடங்கும்.

இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சகத்திடம் இருந்து முழுமையாகக் கையகப்படுத்தப்பட்ட இளைஞர் நாடாளுமன்ற வரைவைத் தற்போது நாடாளுமன்றம் சீர்திருத்துகிறது என்றார்.

2025 மார்ச்சில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல் செயல்முறைக்கு மேலதிகமாக, அடுத்த ஆண்டு செப்டம்பரில் மாநாடு நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தற்போது 100 பேரை மட்டுமே கொண்ட இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 222 ஆக விரிவுபடுத்தப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இளைஞர் நாடாளுமன்ற பிரதிநிதிகளுக்கான வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பது உட்பட பல்வேறு அம்சங்களைத் தீர்மானிக்க பல்கலைக்கழகத்துடன் நாங்கள் தற்போது ஆலோசித்து வருகிறோம்.

இளைஞர் நாடாளுமன்ற பிரதிநிதிகள் தேர்வு செயல்முறை பொதுத் தேர்தலின் அமைப்பைப் போலவே நடத்தப்படும், ஆனால் வித்தியாசம் என்னவென்றால், வாக்குப்பதிவு முறை மூலம் செய்யப்படலாம்.

இந்த இளைஞர் நாடாளுமன்றம் நாட்டின் அரசியலை வழிநடத்தும் புதிய திறமைகளை வழங்கும் களமாக பயன்படும்.

மேலும் அரசியலில் திறமையான பிரதிநிதிகளை உருவாக்குவதற்கும் பக்குவமாக விவாதம் செய்வதற்கும் ஒரு தயாரிப்பு இடமாகத் தோன்றும் என்று அவர் இன்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset