நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கந்தசஷ்டி விரதம் 2024: இன்று நடைபெறுகிறது திருக்கல்யாணம் 

கோலாலம்பூர்: 

முருகப் பெருமானின் அருளை பெறுவதற்காக ஏழு நாட்கள் கந்தசஷ்டி விரதம் இருப்பதற்கு அருள் செய்த முருகப் பெருமானுக்கு முதலில் நன்றி தெரிவித்தும், அவரிடம் ஆசீர்வாதம் வாங்கியும் விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

கந்தசஷ்டியின் ஆறு நாட்களும் விரதம் இருந்தவர்கள் நவம்பர் 08ம் தேதி வெள்ளிக்கிழமை திருக்கல்யாணம் அன்று தான் விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

தங்களுக்காக போர் புரிந்து, சூரபத்மனை அழித்து, தங்களை காத்த முருகப் பெருமானுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என தேவர்கள் நினைத்தார்கள்.

தேவர்களின் தலைவனான இந்திரன், தன்னுடைய வளர்ப்பு மகளை முருகப் பெருமானுக்கு திருமணம் செய்து வைக்க நினைத்தார்.

இதனை ஏற்ற முருகப் பெருமான் திருப்பரங்குன்றத்தில் தெய்வயானையை திருமணம் செய்து கொண்டார். பிறகு வள்ளியை காதலித்து திருமணம் செய்து கொண்டு, திருத்தணியில் சென்று அமர்ந்தார்

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset