நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சீனாவில் கன மழை: 1.20 லட்சம் பேர் வெளியேற்றம்

பெய்ஜிங்:

சீனாவின் சாங்ஷி மாகாணத்தில் பெய்த பலத்த மழையால் ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன. 1.20 லட்சம் பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.

வடக்கு சீனாவின் ஹீபெய் மாகாணத்தில் பெய்த பலத்த மழையால் சிஜியாஜுவாங் என்ற நகரத்தில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அந்த ஆற்றை பாலத்தில் கடக்க முயன்ற ஒரு பேருந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. அதில் இருந்த 51 பயணிகளில் இருவர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். 37 பேரை மீட்புப் படையினர் மீட்டனர். 12 பேரை காணவில்லை.

Heavy rain in Sichuan forces evacuation of 80,000 people - state media |  Reuters

அண்டை மாகாணமான சாங்ஷியில் பலத்த மழையால் ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்து விழுந்தன. அப்பகுதியிலிருந்து 1.20 லட்சம் பேர் மீட்கப்பட்டனர்.

1.90 லட்சம் ஹெக்டேர் பயிர்கள் மழையால் சேதமடைந்துள்ளன என அந்நாட்டு அரசு செய்தி நிறுவனமான ஜின்ஹுவா தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset