
செய்திகள் ASEAN Malaysia 2025
ஆசியான் மையக் கொள்கைக்காக மலேசியா போராடும்: பிரதமர்
பெய்ஜிங்:
ஆசியான் மையக் கொள்கைக்காக மலேசியா தொடர்ந்து போராடும் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
2025 ஆம் ஆண்டில் ஆசியான் தலைவர் பதவியை ஏற்க மலேசியா தயாராகி வருகிறது.
அதே வேளையில் முன்னால் இருக்கும் பெரும் பொறுப்பை முழுமையாக தாம் அறிந்திருக்கிறேன்.
சேர்த்தல், நிலைத் தன்மை என்ற கருப்பொருளுடன் அதன் அனைத்து உறுப்பு நாடுகளுடனும், அளவு அல்லது பொருளாதாரத் திறனைப் பொருட்படுத்தாமல் வளர்ச்சி, மேம்பாட்டின் நன்மைகளை ஆசியான் சமமாக பகிர்ந்து கொள்ள வேண்டும்.
மேலும் ஆசியான் இப்போது 671 மில்லியன் மக்கள் வசிக்கும் பிராந்தியமாக வளர்ச்சியடைந்துள்ளது.
உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 3.8 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள், இது உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உள்ளது.
உலகளாவிய நிலப்பரப்பின் சிக்கலான தன்மைக்கு இப்போது ஆசியான் புதிய பாத்திரங்களையும் பொறுப்புகளையும் வகிக்க வேண்டும் என்று அன்வார் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 12, 2025, 10:29 pm
இல்மு செயற்கை நுண்ணறிவு திட்டம்; வேலை வாய்ப்புகளுக்கு அச்சுறுத்தலாக இருக்காது: கோபிந்த் சிங்
August 12, 2025, 10:26 pm
செயற்கை நுண்ணறிவு தேசமாக மாறுவதை மலேசியா இலக்காகக் கொண்டுள்ளது: பிரதமர்
July 27, 2025, 9:54 am
தாய்லாந்து - கம்போடியா உடனடியாக போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும்: மலேசியா வலியுறுத்து
June 19, 2025, 12:27 pm