நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்திய முஸ்லிம் வர்த்தகர்களின் மேம்பாட்டிற்காக மிம்கோய்ன் தொடர் திட்டங்களை மேற்கொள்ளும்: டத்தோ அப்துல் ஹமித்

பெட்டாலிங்ஜெயா:

இந்திய முஸ்லிம் வர்த்தகர்களின் மேம்பாட்டிற்காக மிம்கோய்ன் தொடர் வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ளும்.

அதன் தலைவர் டத்தோ பிவி அப்துல் ஹமித் இதனை கூறினார்.

மிம்கோய்ன் எனப்படும் மலேசிய இந்திய முஸ்லிம் வர்த்தக சம்மேளனத்தின் 6ஆவது ஆண்டுக் கூட்டம் இன்று நடைபெற்றது.

மாஹ்சா பல்கலைக்கழகத்தின் தலைவர் செனட்டர் டான்ஸ்ரீ முஹம்மத் ஹனிபா இக் கூட்டத்தை தொடக்கி வைத்து உரையாற்றினார். அவர் தமதுரையில்,

மலேசியாவில் இந்திய சமுதாயம் 100 ஆண்டுகளுக்கும் மேலாக இந்நாட்டில் வர்த்தகம் செய்து வருகின்றனர்.

இவர்கள் தங்களின் தொழிலை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். 

குறிப்பாக இந்திய முஸ்லிம் வர்த்தகர்கள் தங்களின் வர்த்தகத்தை தொழில் நுட்பத்தை இணைத்துக் கொள்ள வேண்டும். இதுவே வெற்றியை தரும் என்று டான்ஸ்ரீ ஹனிஃபா கூறினார்.

ஆரம்பக் காலத்தில் இருந்து டத்தோ ஜமாருல்கான் மிம்கோய்னை வெற்றிகரமாக வழிநடத்தி வந்தார்.

தற்போது அவர் தனது தலைவர் பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். இவ்வேளையில் அவருக்கு நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்.

அதே வேளையில் புதிய தலைமைத்துவம் மிம்கோய்னுக்கு வழி நடத்த உள்ளது.

இந்திய முஸ்லிம் வர்த்தகர்களின் மேம்பாட்டிற்கு பாடுபடுவது தான் எங்களின் முதன்மை இலக்காக உள்ளது. குறிப்பாக சிறு தொழில் வர்த்தகர்களையும் ஒன்றிணைத்து அவர்களையும் அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

இதற்காக பல திட்டங்களை மேற்கொள்ளவும் நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.

இதில் அனைவரும் பங்கேற்று வெற்றி பெற வேண்டும் என டத்தோ அப்துல் ஹமித் நம்பிக்கைக்கு அளித்த  சிறப்பு நேர்காணலில் தெரிவித்தார். 

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset