நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

சொத்தில் நாய்க்கும் பங்கு: உயில் எழுதி வைத்த ரத்தன் டாடாவின் நெகிழ்ச்சி செயல்

மும்பை:

மறைந்த தொழில் அதிபர் ரத்தன் டாடா எழுதிய உயிலில், சமையல்காரர், உதவியாளருக்கு சொத்து வழங்கியது மட்டுமின்றி, வளர்ப்பு நாயை பராமரிக்கவும் சொத்து எழுதி வைத்துள்ளார்.

ரத்தன் டாடாவின் ரூ.10,000 கோடிக்கு மேலான சொத்துக்களில் இருந்து பெரும்பகுதி டாடா அறக்கட்டளைக்கு செல்லும்.

உயிலில் தனது வளர்ப்பு நாய்க்கு ரத்தன் டாடா முக்கியத்துவம் கொடுத்துள்ளார். ஜெர்மன் வகையை சேர்ந்த டிட்டோ என்ற ஒரு நாயை ரத்தன் டாடா ஆசையாக வளர்த்து வந்தார். இறப்பு வரைக்கும் தன்னுடன் இருந்த அந்த டிட்டோவுக்கும் தனது சொத்தில் ஒரு பங்கை எழுதி வைத்துள்ளார். மேலும் தனது டிட்டோ நாயை தனது சமையல்காரர் ராஜன் ஷா கவனித்துக் கொள்வார் என்றும் உயிலில் குறிப்பிட்டுள்ளார்.

அவருக்கு கடைசி காலத்தில் மிகவும் நெருக்கமாக இருந்த உதவியாளர் சாந்தனு நாயுடு, அவரது சகோதரர் ஜிம்மி டாடா, ஒன்றுவிட்ட சகோதரிகள் ஷிரீன் மற்றும் டீன்னா (தாயின் இரண்டாது திருமணத்தின் மூலம் பிறந்தவர்கள்) ஆகியோருக்கு சொத்துக்கள் கிடைக்கும்படி செய்துள்ளார்.

தன்னிடம் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக சமையல்காரராக இருக்கும் சுப்பையாவுக்கும் சொத்துக்களை டாடா எழுதி வைத்துள்ளார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset