செய்திகள் கலைகள்
ரஜினி சாதிக்காததை உதயநிதி ஸ்டாலின் செய்யப் போகிறார்: சினிமா விநியோகஸ்தர்களுக்கு 'செக்'
சென்னை:
கோலிவுட்டில் ஒரு அதிரடி மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான முயற்சியில் தமிழக முதல்வரின் மகனும் நடிகரும் எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் ஈடுபட்டுள்ளார்.
இனி புதுப்படங்களை வெளியிடு தொடர்பாக திரையரங்க உரிமையாளர்களும் தயாரிப்பாளர்களும் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்றும் இடைத்தரகர்களுக்கு இதில் இடமில்லை என்றும் உதயநிதி தரப்பில் கூறப்படுகிறது.
அதாவது இடைத்தரகர்கள் என அவர்கள் குறிப்பிடுவது சினிமா வினியோகஸ்தர்களைத்தான்.
இதன் மூலம் கோடம்பாக்கத்தில் இனி விநியோகஸ்தர்கள் என்ற பிரிவினருக்கு இனி வேலையே இருக்காது என்றும், திரையரங்க உரிமையாளர்களும் தயாரிப்பாளர்களும் இதன் மூலம் ஆதாயமடைவார்கள் என்றும் விவரமறிந்தவர்கள் கூறுகின்றனர்.
"முன்பெல்லாம் ஒரு திரைப்படம் நன்றாக ஓடினாலும் விநியோகஸ்தர்கள் அதில் கணிசமான பகுதியை எடுத்துக் கொள்வதால் தயாரிப்பாளர்களின் லாபம் குறைந்து போகும். இனி அவ்வாறு நடக்காது," என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.
கடந்த 1993ஆம் ஆண்டு ரஜினி நடித்த உழைப்பாளி படம் இப்படித்தான் விநியோகஸ்தர்கள் குறுக்கீடு இன்றி திரையரங்கு உரிமையாளர்களின் ஆதரவுடன் வெளியானது. ஆனால் ரஜினியும் விநியோகஸ்தர்களும் பின்னர் ராசியாகிவிட்டனர்.
ஆனால், உதயநிதி தரப்போ, வியாபார விஷயத்தில் 'வெட்டு ஒன்று துண்டு இரண்டு' எனக் கறாராகவும் சரியாகவும் செயல்படுவதாகத் தகவல். அதனால் ரஜினி சாதிக்காத ஒன்றை உதயநிதி செய்து காட்டுவார் என்று கோலிவுட்டில் பேசப்படுகிறது.
ரஜினியின் 'அண்ணாத்த' உட்பட சுமார் 8 பெரிய பட்ஜெட் படங்கள் இந்தப் புதிய முறையில் வெளியீடு காண உள்ளதாக கோடம்பாக்கத்தில் பரபரப்பு நிலவுகிறது.
தொடர்புடைய செய்திகள்
September 30, 2026, 3:27 pm
நடிகர் சூரியின் மண்டாடி திரைப்படம் 140 கோடி ரூபாய் வசூல் சாதனை
September 30, 2026, 3:17 pm
வெங்கட் பிரபு - சிவகார்த்திகேயன் இடையிலான படம் கைவிடப்பட்டது: வெங்கட் பிரபு எக்ஸ் தளத்தில் பதிவு
September 25, 2026, 2:54 pm
டோரொத்தி திரைப்படத்திற்கு மலேசியாவில் தடை ? LGBTQ அம்சங்கள் உள்ளதால் தணிக்கை வாரியம் உத்தரவு
September 15, 2026, 11:38 am
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் பார்வையில் வில்லன்கள்: திரைக்கதையின் உயிரோட்டம்
September 15, 2026, 11:29 am
ONDRA RENDA -25 YEARS OF GVM : GVM-இன் ஹீரோக்கள் – ஸ்டைலுக்கும் உணர்வுக்கும் ஒரு முகம்
September 14, 2026, 5:25 pm
பிக் பாஸ் தமிழில் முதலமைச்சர் விஜய்யை சீண்டினாரா நடிகர் விஜய் சேதுபதி ? சமூக ஊடகங்களில் வெடித்தது கலவரம்
September 10, 2026, 4:45 pm
