
செய்திகள் ASEAN Malaysia 2025
ஆசியான் உச்சநிலை மாநாடு நடைபெறும் அனைத்து இடங்களிலும் 5G அதிவேக இணையச் சேவை வசதி வழங்கப்படும்: ஃபஹ்மி ஃபாட்சில்
கோலாலம்பூர்:
2025-ஆம் ஆண்டுக்கான ஆசியான் உச்சநிலை மாநாடு நடைபெறும் அனைத்து இடங்களிலும் 5G அதிவேக இணையச் சேவை வசதி வழங்கப்படும் என்று தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் தெரிவித்தார்.
அனைத்து மாநாட்டுத் தளங்களிலும் 5ஜி அதிவேக இணையச் சேவை பொருத்தப்பட்டிருப்பதை மலேசியத் தகவல் தொடர்பு பல்லூடக ஆணையம் உறுதி செய்யும் என்றார் அவர்.
உயர் அதிகாரிகள் அல்லது அமைச்சர்கள் மட்டத்தில் ஆசியான் கூட்டத்தின் அமைப்பில் ஈடுபட்டுள்ள அனைத்து இடங்களிலும் சேவை வழங்கப்படும் என்றும் ஃபஹ்மி உறுதிப்படுத்தினார்.
2025-ஆம் ஆண்டுக்கான ஆசியான் மாநாட்டின் அதிகாரப்பூர்வ ஊடகமாக பெர்னாமாவும் ஆர்டிஎமும் செயல்படும் என்றார் அவர்.
- அஸ்வினி செந்தாமரை