நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவில் நீச்சல், நீர் நடவடிக்கைகளைத் தொடரலாம்

சிங்கப்பூர்: 

ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவிலும் தெற்குத் தீவுகளிலும் நீச்சல், நீர் நடவடிக்கைகள் தொடரலாம் எனத் தேசியச் சுற்றுப்புற அமைப்பு அறிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை (20 அக்டோபர்) முதல் கடலிலும் கரைகளிலும் எண்ணெய்க் கசிவு ஏதும் கண்டறியப்படவில்லை என்று அது முகநூலில் தெரிவித்தது.

Shell நிறுவனம் தனது குழாயிலிருந்து 30 முதல் 40 மெட்ரிக் டன் எண்ணெய் கசிந்திருப்பதாகச் சென்ற வாரயிறுதியின்போது கூறியது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நீச்சல், நீர் நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறு அமைப்பு குறிப்பிட்டிருந்தது.

எண்ணெய் கசிவைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset