செய்திகள் கலைகள்
அமரன், பிரதர், & பிளடி பெக்கர் ஆகிய படங்கள் 2024ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகின்றன
சென்னை:
அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் இவ்வாண்டு தமிழ்ச்சினிமா சார்பாக மூன்று திரைப்படங்கள் வெளியாகவுள்ளன.
சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் திரைப்படம் வெளியாகிறது. இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் குமார் இசையில் இந்த அமரன் படம் உருவாகியுள்ளது
இதனிடையே, நடிகர் ஜெயம் ரவியின் பிரதர் திரைப்படமும் நடிகர் கவினின் பிளடி பெக்கர் படமும் தீபாவளியன்று வெளியாகிறது.
இயக்குநர் எம்.ராஜேஷ் பிரதர் படத்தை இயக்கியுள்ள நிலையில் முன்னணி இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
மேலும், இயக்குனர் நெல்சன் தயாரிப்பில் அறிமுக இயக்குனரான சிவபாலன் முத்துகுமார் இயக்கத்தில் கவின் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் பிளடி பெக்கர். இந்த திரைப்படமும் தீபாவளிக்கு வெளியாகிறது
தமிழ்ச்சினிமா ரசிகர்களுக்குக் கொண்டாட்டம் நிறைந்த வாரமாகவே இந்த வாரம் அமையவிருக்கிறது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
September 15, 2026, 11:38 am
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் பார்வையில் வில்லன்கள்: திரைக்கதையின் உயிரோட்டம்
September 15, 2026, 11:29 am
ONDRA RENDA -25 YEARS OF GVM : GVM-இன் ஹீரோக்கள் – ஸ்டைலுக்கும் உணர்வுக்கும் ஒரு முகம்
September 14, 2026, 5:25 pm
பிக் பாஸ் தமிழில் முதலமைச்சர் விஜய்யை சீண்டினாரா நடிகர் விஜய் சேதுபதி ? சமூக ஊடகங்களில் வெடித்தது கலவரம்
September 10, 2026, 4:45 pm
இசைஞானி இளையராஜா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: சரிகமா இந்தியா டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்
September 7, 2026, 9:47 pm
உலக அழகி போட்டி: மலேசிய தமிழ்ப் பெண் தனுசியாவுக்கு 3-ஆம் இடம்
September 6, 2026, 4:19 pm
‘அரசன்’ திரைப்படம் கோலிவுட்டுக்கு பெருமை சேர்க்கும்”: சிலம்பரசன் நம்பிக்கை
September 5, 2026, 12:07 pm
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் - இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்: எப்போதும் ஸ்பெஷலான கோம்போ
September 5, 2026, 11:57 am
