
செய்திகள் சிந்தனைகள்
சகோதர தாத்பர்யம் எப்படி இருக்க வேண்டும்? - வெள்ளிச் சிந்தனை
சகோதரத்துவத்தின் உன்னத உதாரணபுருஷர்களான
அன்சாரிகளைப் புகழ்ந்து,அல்லாஹ் இவ்வாறு பேசுகின்றான்: {மேலும், தாங்களே தேவையுள்ளவர்களாய் இருந்தாலும் கூட, தங்களைவிடப் பிறருக்கே முன்னுரிமை வழங்குகின்றார்கள்.
_அல்-ஹஷ்ர்: 9_)
அன்சாரிகள் தங்கள் முஹாஜிர் சகோதரர்களுக்குப் பொறுப்பாக தங்களை ஏற்றுக் கொண்டு, அவர்களுடன் தங்கள் செல்வங்களைப் பகிர்ந்து கொள்ள முன்வந்தனர். ஆனால் மறுபுறம், முஹாஜிர்களோ தங்கள் அன்சாரி சகோதரர்களின் செல்வத்தை தங்களுடன் பங்கிட்டு ஏற்க சங்கடப்பட்டு மறுத்து விட்டனர்.
அண்ணலார் (ஸல்) அவர்களின் தோழர்களில் ஒருவருக்கு ஒரு ஆட்டின் தலை வழங்கப்பட்டது. அதை அவர் தனது சகோதரருக்கு பங்காகவும், அன்பளிப்பாகவும் கொடுப்பார். அது ஏழு தோழர்களைக் கடந்து வந்து, மீண்டும் முதல் நபரிடமே திரும்பி வந்து அடைந்திருக்கும். ஒவ்வொருவரும் தன்னைவிட தன் சகோதரனையே அதிகம் விரும்பினார்கள்.
சில அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்:- சுயநலமற்ற தியாகத்தின் மூன்று நிலைகள் உள்ளன:
•அதன் மிகக் குறைந்த நிலை என்னவென்றால், உங்கள் தேவைகளை விட அதிகமான செல்வம் உங்களிடத்தில் இருக்கும் பட்சத்தில் அதனைக் கொண்டு மற்றவருடைய தேவைகளை நீங்கள் பூர்த்தி செய்யுங்கள். அதாவது, உங்கள் செல்வம் ஒருவருக்குத் தேவைப்படுகிறது. அத்தகைய தருணத்தில் உங்களிடம் கூடுதல் செல்வம் உள்ளது. இப்போது, உங்கள் உண்மையான தேவை போக, அதை அவருக்குக் கொடுங்கள், அதற்காக,அவரைக் கேள்வி கேட்டு குடைந்து அவமானத்திற்குள்ளாக்காதீர்கள்.
அதுவும், அவருக்குத் தேவை உள்ளது என்பதை நீங்கள் உணர்ந்திருந்தும், அவரைக் கேள்வி கேட்டு சங்கடப்படுத்தி தொல்லைப்படுத்தினால் நிச்சயமாக, நீங்கள் உங்கள் சகோதரரின் உரிமையில் அலட்சியம் காட்டுவதில் உச்ச நிலை எட்டி விட்டீர்கள் என்றே பொருள்படும்.
•இரண்டாவது நிலை என்னவென்றால், உங்கள் சகோதரனை உங்களுக்கு இணையாகக் கருதி, உங்கள் செல்வத்தில் அவருக்கும் பங்கு உண்டு என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
அலி பின் ஹுசைன் (ரலி ) அவர்கள் ஒரு மனிதரிடம் கூறினார்: "உங்களில் ஒருவர் தனது சகோதரரின் சட்டையிலோ அல்லது பையிலோ தனது கையை வைத்து, தான் விரும்பியதை
அவருடைய அனுமதியின்றி எடுத்துக்கொள்வாரா?"
அவர் கூறினார்: "நிச்சயமாக இல்லை"
பதிலளிக்கப்பட்டது:-
"அப்படியானால் நீர்,ஒரு சகோதரராக இருக்க முடியாது."
ஹசன் பஸ்ரி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் தனது ஆடையில் (ஒரு பகுதியைக்) கிழித்து அதில் பாதியை தனது சகோதரருக்குக் கொடுப்பார்.
ஒரு மனிதர் அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வுக்காக நான் உங்களுடன் சகோதரத்துவத்தை ஏற்படுத்த விரும்புகிறேன்" என்றார்.
அவர் பதிலளிக்கும் வகையில் வினவினார்:-
"சகோதரத்துவத்தின் உரிமை என்னவென்று உமக்கு தெரியுமா, என்ன?"
அம்மனிதர் கூறினார்:- "எனக்கு அறிவியுங்கள்!"
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்:-
"உங்கள் தினார் மற்றும் திர்ஹம்கள் மீது என்னை விட உங்களுக்கு அதிக உரிமை இல்லை."
அவர் கூறினார்: "நான் இன்னும் அத்தகையதொரு நிலையை எட்டவில்லை." அபூ ஹூரைரா (ரலி) கூறினார்: "அப்படியானால் என்னை விட்டு விலகிச் சென்று விடுவீராக!"
•மூன்றாவது நிலை என்னவென்றால், உங்களை விட உங்கள் சகோதரரை நீங்கள் அதிகம் விரும்பச் செய்யுங்கள்.
உங்கள் தேவையை விட
அவருடைய தேவைக்கு முன்னுரிமை
தாருங்கள். இதுவே உண்மையாளர்களின், நிலையும் பரஸ்பரம் அன்பு பாராட்டும் சகோதரர்களின் மிக உன்னத நிலையும் ஆகும்.
- அப்துல் முஸவ்விர்
தொடர்புடைய செய்திகள்
October 17, 2025, 7:18 am
குதிரைகள் மீது அல்லாஹ் ஏன் சத்தியம் செய்கின்றான்?: வெள்ளிச் சிந்தனை
September 26, 2025, 9:30 am
இறப்புக்கு மட்டுமா இன்னாலில்லாஹி? - பொருள் என்ன? - வெள்ளிச் சிந்தனை
September 19, 2025, 8:06 am
வெளவால் - இறைவனின் அற்புதப் படைப்பு: வெள்ளிச் சிந்தனை
September 12, 2025, 8:32 am
Pillars of Jupiter மூலம் இறைவன் நமக்கு உணர்த்துவது என்ன? - வெள்ளிச் சிந்தனை
September 5, 2025, 7:29 am
நபி (ஸல்) அவர்கள் கூறிய இரண்டு கற்களின் உதாரணம் - வெள்ளிச் சிந்தனை
August 26, 2025, 6:20 pm