நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் சிந்தனைகள்

By
|
பகிர்

உங்கள் நேர்மையை, உண்மையான பண்புகளை அறியாதவர்களை இறைவனிடம் விட்டுவிடுங்கள் - வெள்ளிச் சிந்தனை

உங்கள் நேர்மையை, உண்மையான பண்புகளை அறியாதவர்களை.. அல்லாஹ்விடம் விட்டுவிடுங்கள்!

உங்களைப் பற்றி மோசமாக நினைத்தவர்களை..  
அல்லாஹ்விடம் விட்டுவிடுங்கள்!

நீங்கள் உண்மையாக நேசித்து, உங்களை ஏமாற்றியவர்களை..
அல்லாஹ்விடம் விட்டுவிடுங்கள்!

நீங்கள் கை கொடுத்தவர்கள்.. ஆனால் உங்களையே பின்னால் இருந்து குத்தியவர்களை..
அல்லாஹ்விடம் விட்டுவிடுங்கள்!

நீங்கள் வீழும்வரை காத்திருந்து உங்களை விட்டுச் சென்றவர்களை..
அல்லாஹ்விடம் விட்டுவிடுங்கள்!

உங்களை தரக்குறைவாக நினைத்தவர்களை..
அல்லாஹ்விடம் விட்டுவிடுங்கள்!

உங்கள் தேவைகளின்போதும் கஷ்டங்களின்போதும் உங்களைக் கைவிட்டவர்களை.. 
அல்லாஹ்விடம் விட்டுவிடுங்கள்!

அடுத்தவர்களிடம் உங்களைக் குறித்து தரக்குறைவாக பேசியவர்களை..
அல்லாஹ்விடம் விட்டுவிடுங்கள்!

நீங்கள் அவர்களை வெறுக்க வேண்டாம்.
ஏனெனில், வெறுப்பு அன்புக்கும் மன்னிப்புக்கும் எதிரான ஓர் உணர்வாகும்.

காலம் ஒருநாள் நிச்சயம் அவர்களுக்கு பதில் சொல்லும். ஆகவே,
அவர்களை அல்லாஹ்விடம் விட்டுவிடுங்கள்!

நீங்கள் யார்? உங்கள் உண்மை என்ன? உங்கள் மதிப்பு என்ன? என்பதை நிச்சயம் அவர்களுக்கு அல்லாஹ் உணர்த்துவான்.

உங்கள் நிலைமைகள் எதுவாக இருந்தாலும் அனைத்திற்கும் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துங்கள்.

பொறுமையாக இருந்து அல்லாஹ்விடம் உதவி தேடுவதைத் தவிர வேறெதுவும் பயன் தராது.

துன்பத்திற்குப் பிறகு விடிவு இருக்கத்தான் செய்கிறது.

"உண்மையில் சிரமத்துடன் இலகுவும் இருக்கின்றது”. (அல்குர்ஆன்: 94:5)

- நூஹ் மஹ்ழரி

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset